பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடன்பிறவாத் தம்பியரும் இராமனும் ேே 273 சொல்லுக்கு, அரசிபோல் அலங்கரித்து' என்று பொருள் செய்துவிட்டான் வீடணன். வீடணன் சீரொடும் கொணர்க. என்று வள்ளல் சொன்னார் ஆதலின் அரசிக்குரிய அலங்காரத்தோடு வரவேண்டும் என்று சொல்லியும், அந்தச் சொல்லின் உண்மைப் பொருளை அறிந்த பிராட்டி இதோ பேசுகிறாள்: “யான் இவண் இருந்த தன்மை, இமையவர் குழுவும், 6TBjööst கோனும், அம்முனிவர் தங்கள் கூட்டமும், குலத்துக்கு ஏற்ற வான்உயர் கற்பின் மாதர் ஈட்டமும், காண்டல், மாட்சி; மேல்நிலை கோலம் கோடல் விழுமியது.அன்று விர!" - கம்ப 9991 இராமன் மனத்தை நன்கு அறிந்தவள் ஆதலின் பிராட்டி இங்குக் கூறியது முற்றிலும் பொருத்தமே ஆகும். ஆனால், புதிதாக முடிசூட்டிக் கொண்ட வீடணன் பிராட்டியை அரசகுமாரிபோல் அலங்கரித்து அழைத்துப் போவதுதான் தன் நாட்டிற்கு வந்தவர்களை உபசரிக்கும் முறையாகும் என்று கருதிவிட்டான். இலக்குவன் புத்திமதியை, பிராட்டி அவமதித்ததால்தான் இத்தனை அனர்த்தங்களும் விளைந்தன என்று அவள்பால் பெருஞ்சினங் காட்டிய இராகவன், இந்த அலங்காரங்களைக் கண்டதும் சீறலாம். அவன் சீற்றமடைதற்கு இவள் அலங்காரம் துணைக் காரணமே தவிர முதற்காரணம் அன்று. முதற்காரணம் என்ன என்பதைக் பின்னர்க் காணலாம். - எனவே, சுக்கிரீவனைப் போல இவனுக்கும் தலையில் கிரீடம் வைக்கப்பட்டது. இவர்கள் இருவருக்கும் மாறுபட்டு, அறிவின் துணையை நாடாமல் உணர்வின் துணைகொண்டு இராமனை நாடுகின்றான் குகன். அறிவு, ஞானம் என்பவற்றின் துணைகொண்டு சுக்கிரீவன், வீடணன் போன்றவர்களும் பரம்பொருளை அறிந்து கொள்ளலாமேனும் அறிந்த பின்னரும், நான் அறிந்தேன்’ என்ற எண்ணம் இருக்கத்தான் செய்யும் அறிவு வழியில் உள்ள இந்த இடர்ப்பாட்டை அ-18