பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. பிராட்டியும் இராமனும் கண்வழியே இதயம் புகுந்த இருவர் மையறு மலரின் நீங்கிய செய்யவள் மிதிலை நகரத்தில் சனகனுடைய வளர்ப்பு மகளாக வளர்ந்து வருகிறாள். ஒருநாள் அந்த மிதிலை நகரில் ஒரு வீதியில் மூன்று புதியவர்கள் நடந்து செல்கின்றனர். தவத்தில் மிக்க முனிவன் ஒருவன் முன்னே நடக்கின்றான். அவன் பின்னர் வில் ஏந்திய காளமேகம் என ஒர் இளைஞன், அவன் பின்னர் வில் ஏந்திய பொன்மலை என்ன மற்றோர் இளைஞன். மிதிலை நகரில் வீதிகளில் இரு மருங்கும் ஓங்கிய மாடமாளிகைகள் முனிவன் மனத்தைக் கவரவில்லை. அவன் மனமும், கண்ணும் எங்கோ சூனியத்தில் லயித்து இருக்கின்றன. மூன்றாவதாக வந்த பொன்மலை அடக்கத்தின் உறைவிடமாய் பூதலம் என்னும் நங்கை தன்னையே பார்ததுக கொண்டு நடக்கின்றான். நடுவே வந்த காளமேகம் தெருவை நேரே பார்த்துக் கொண்டு சென்றவன், பால்வரை தெய்வம் கடைக்கூட்ட திடீரென்று அண்ணாந்து பார்க்கிறான். கன்னிமாடத்தின் மேல்மாடியில் அழகெலாம் திரண்டு ஒரு வடிவு பெற்ற பெண் மயிலாள் ஒருத்தி நடந்து வருபவர்களில் நடுவே வருபவனைக் கண்டாள். அவள் பார்வை கீழே சென்றபொழுது காளமேகத்தின் பார்வை அதே கோணத்தில் மேல்நோக்கிச் சென்றது. ஒரே வினாடியில் இருவர் பார்வையும் மாறி, இருவரும் ஒருவரை ஒருவர் நோக்கினர். அந்த ஒரு வினாடி நோக்கில் ஒரு யுகமே கடந்துவிட்டது. ஒருவன் தரையில் கால்நோவ நடக்கின்றான். அவளோ,