பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராட்டியும் இராமனும் ேே 279 கன்னிமாடத்தின் உம்பரில் பூவின் மெல்லடிப் பாதம் நோவ நிற்கின்றாள். இந்த இருவருக்குமே கடினமான பொருள்களின் மேல் நின்று பழக்கமில்லை. சிலகாலத்திற்கு முன்னர்வரை, பாற்கடல் தன்மேல் சுருண்டு சுருண்டு படுத்துள்ள ஆதிசேடன் தாலாட்ட வழுவழுப்பும், மென்மையும் நிறைந்த அந்த ஆதிசேடனன் மேல் இந்த ஒருவனும், அந்த ஒருத்தியும் பல யுகங்களாக இருந்து பழக்கப்பட்டவர்கள். இந்தச் சில ஆண்டுகளாக அவன் எங்கோ பிறந்து வளர்கின்றான்; இவள் எங்கோ வளர்கின்றாள். இந்த வினாடிவரை இவர்களில் ஒருவர் எங்குள்ளார் என்று மற்றவருக்குத் தெரியாது. இந்த ஒரு வினாடி நோக்கில் முரடாக உள்ள தரையையும், மாடி முற்றத்தையும் விட்டு இவன் இதயத்தில் அவளும், அவள் இதயத்தில் இவனும் குடியேறிவிட்டார்கள். இந்த ஒரு வினாடி நிகழ்ச்சியைப் பல நாழிகை நடந்ததுபோலக் கவிஞன், "எண்ண அரு நலத்தினாள் இணையள் நின்றுழி, கண்ணொடு கண் இணை கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும், நிலைபெறாத உணர்வும் ஒன்றிட, அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்." - ... ! 514 வரிசிலை அண்ணலும் வாள் - கண் நங்கையும், இருவரும் மாறிப்புக்கு, இதயம் எய்தினார்" - கம்ப 516 என்றும் கூறினான். வில்லும் காண்பார் சனகன் நிகழ்த்திய வேள்வியைக் காணலாம் என்ற ஒரு காரணத்தைக் காட்டித்தான் முழுதுணர் முனிவனான