பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராட்டியும் இராமனும் ேே 285 வசிட்டனும் விசுவாமித்திரனும் வேதியர் புடைசூழ, வைதிகச் சடங்குகட்குத் தலைமை வகித்த வசிட்டன் வேத விதிப்படி திருமணம் செய்துவைத்தான் என்கிறான் கவிஞன். இங்குத் திருமணத்தை முடித்துவைத்த இதே வசிட்டன்தான் முடிசூட்டு விழாவிற்கும் நாள் குறித்துத் தந்தனன். என்ன விந்தை! முழுதுணர் முனிவனாகிய வசிட்டன் இராமனுக்கு என்று எது செய்தாலும் உலகியல் முறையில் அது துலங்காமலே போய்விட்டது. மணமக்கள் இருவரும் விரைவில் காடு செல்லவும், திருமுடி சூட்டப்படாமலே செல்லவும் நேர்ந்து விட்டன. வசிட்டன் சாதாரணப் புரோகிதன் அல்லவே! அப்படி இருக்க, அவன் நாள் வைத்துச் செய்த இரண்டு நிகழ்ச்சிகளும் மாறுபட்டுப் போனதற்குக் காரணம் என்ன என்று சிந்தித்தால் நன்றே விளங்கிக் கொள்ள முடியும். தசரத ராமனின் உள்ளே மூல இராமன் இருந்து தசரதராமனைச் செயல்படுத்துவது போல வசிட்டன் என்ற முனிவனின் உள்ளே பரம்பொருள் தங்கி இருந்து அவனை இவ்வாறு நாள் குறித்துக் கொடுக்கச் செய்தது போலும்! அன்றியும் சப்த ரிஷிகளில் ஒருவனாகிய அவன் அவதார நோக்கத்தை அறிந்தவனாதலால், பிறர் அறியா வண்ணம் அவதார நோக்கம் நிறைவேற என்னென்ன செய்ய வேண்டுமோ அவற்றைச் செய்தான் என்று கொள்ளுதலும் ஒன்று. ஏழு முனிவர்களுள் ஒருவனாகிய வசிட்டன் இவற்றைச் செய்ய மற்றொரு பிரம்மரிஷியாகிய விசுவாமித்திரன் எங்கோ இருக்கின்ற சீதையை இராகவன் மணமுடிக்க ஏற்பாடு செய்கின்றான். சாதாரண மக்கள் புரிந்துகொள்ள முடியாததும் அறிந்துகொள்ள முடியாததுமான எதிர்காலத்தையும் அக்காலத்தில் நடைபெற வேண்டிய நிகழ்ச்சிகளையும் இம்மாமுனிவர்கள் மிக எளிதாக அறிவதால் எங்கே எங்கே எப்பொழுது எப்பொழுது என்னென்ன செய்ய வேண்டுமோ அவற்றை ஒசைப்படாமல் செய்துவிடுகின்றனர். தாடகை இன்று நேற்று வந்தவளல்லள். அவளைக் கொல்வதற்காகவா