பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 38 இராமன் - பன்முக நோக்கில் "சித்திர கூடத்தில் இருந்தபொழுது இந்திரன் மகனாகிய சயந்தன் காக வடிவில் வந்து தன்னைத்துன்புறுத்தியபொழுது சினம் கொண்ட இராமன் ஒரு புல்லையே அம்பாக எடுத்து வீச, காக வடிவில் இருந்த சயந்தனுக்கு மட்டும் அல்லாமல் காக்கை இனம் முழுவதற்கும் ஒரு கண்ணைப் போக்கி விட்ட இராகவன் வீரத்தை நினைத்தாள்." (509) மூலநூல் வழியை மாற்றுதல் இந்த ஒரு பாடலைப் பற்றி மட்டும் சிறிது சிந்திக்க வேண்டி உள்ளது. மூலநூலாகிய வான்மீகத்தில், சுந்தரகாண்டம் 88ஆவது சருக்கத்தில் 11ஆம் பாடல் முதல் 33ஆம் பாடல் முடிய இந்தச் சயந்தன் கதை மிக விரிவாகப் பேசப்பட்டுள்ளது. பிராட்டியின் சிறப்பைக் குறைக்கும் வகையில் இந்தக் கதை அமைந்திருப்பதால், கம்பன் இதை முழுவதுமாக ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. இன்னது என்று கூறாமல் ஒர் அம்பால் இந்திரன் மகனாகிய சயந்தன் கண்ணைப் போக்கிய இராமனது பேராற்றலை நினைந்தாள் என்று மட்டும் பாடிச் சென்றுவிட்டான். கம்பன் பாத்திரப் படைப்பிலும், நிகழ்ச்சிகளைக் கூறுவதிலும், பெரும்பாலும் மூலநூலைப் பின்பற்றியே சென்றுள்ளான் என்பதை அறிய முடிகிறது. முடிசூட்டு விழாவிற்கு முன்னர் நிகழ்ந்த கைகேயி இராமன் உரையாடல்; வனம் புகுமுன் நிகழ்ந்த இராமன் - சீதை உரையாடல்; வனத்தில் மாரீசன் குரலைக் கேட்ட பின்னர்ச் சீதை - இலக்குவன் உரையாடல் என்பன போன்ற பகுதிகளில் அந்த உரையாடல்கள் பாத்திரங்களின் தரத்தை மிகவும் குறைத்துவிடும் நிலையில் மூலநூல் அமைந்திருத்தலின் கம்பன் முழுவதுமாக இவற்றை மாற்றிவிட்டான். அதே முறையைப் பின்பற்றி இந்தக் காக்கைக் கதைக்கும் மிக அற்புதமான வடிவைக் கொடுத்துவிட்டான். மேலே கண்ட பாடல்களில் கூறப்பெற்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் பிராட்டி நேரிடையாகத் தன் கண்ணால் கண்ட நிகழ்ச்சிகளாகும். s