பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராட்டியும் இராமனும் ே 303 6. "எனை மணம் புரிந்துகொண்ட அன்று என் கையைப் பிடித்துக் கொண்டு இந்தப் பிறவியில் வேறு ஒருத்தியை மனத்தினாலும் நினைக்க மாட்டேன்' என்று எனக்கு வரம் தந்ததைப் பிறர் யாரும் கேட்காமல் அவர் காதுகளின் அருகில் சென்று மெதுவாகக் கூறுவாயாக." (5378) 7. "இங்கே இருந்து நான் இறந்து விட்டாலும் மறுபடியும் பிறந்து அவருடைய அழகிய மேனியைத் தொடக்கூடிய வரத்தை எனக்குத் தரவேண்டும் என்று சொல்வாயாக." (5379) 8. "பட்டத்தரசியாக நின்று ஆளவும், பெரிய யானையின் மீது அமர்ந்து ஊர்வலம் வர இயலாத நான் இப்பொழுது அது பற்றிப் பேசிப் பயனில்லை. ஊழ்வினையை நினைக்கின்றேன்."(5880) 9. "இராமன் காடு வந்ததால் வருந்தி நிற்கும் உலகிற்கும், தாய்மார்களின் மனவருத்தத்திற்கும், பரதன் அடைந்து கொண்டிருக்கின்றதுன்பத்திற்கும் ஒரு முடிவு கட்ட வேண்டிய கடமையிலுள்ள இராகவன் எனக்காக இங்கு வருவான் என்று நினைப்பதே தவறாகும்." (538) 10. "என்னுடைய சுற்றத்தார் அனைவருக்கும் என் வணக்கத்தைச் சொல்வாயாக. குரக்கிளின் மன்னனாம் சுக்கிரிவனை, இராமனை விடாமல் தொடர்ந்து சென்று அயோத்தி அடைந்து அவனுக்கு முடிசூட்டுவிக்குமாறு நான் கேட்டுக்கொண்டேன் என்று கூறுவாயாக." (5882) சீதாபிராட்டி நிலை - ஒரு விளக்கம் மீட்கப்படுவோம் என்ற நம்பிக்கையை அறவே இழந்து உயிரை உடம்பில் ஒட்டவைத்துக் கொண்டிருக்கும் பிராட்டி அனுமனைக் கண்டு அங்குள்ள செய்தியெல்லாம் அறிந்த பிறகு மீட்கப்படுவது உறுதி என்ற நம்பிக்கையின் உச்சத்திற்குச் செல்கிறாள். இருந்தாலும் என்ன? அவளை ஒத்த துன்பம் அடைந்தவர்கள் நம்பிக்கை பெறுவது என்பது இயலாத