பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராட்டியும் இராமனும் ே 309 "ஒழுக்கம் பாழ்படும்படியான நிலைவந்திடினும் உயிரை விடாமல் உணவை விரும்பி உண்டாய். அரக்கனுடைய நகரில் இதுகாறும் வாழ்ந்தாய். இப்பொழுது எது கருதி என்பால் வந்தாய்? நான் உன்னை விரும்புவேன் என்று நினைத்தாயோ?" (100.13) "கடலைத்துர்த்து, அணைகட்டி மின்னலையும் மழுங்கச் செய்யும் ஒளியுடைய பல்வேறு படைகளை உடைய அரக்கரை வேரறுத்து, இந்தப் பெரிய பகையினை நான் கடந்தது உன்னை மீட்பதற்கு என்று நினைத்து விடாதே. மனைவியைக் கவர்ந்தவனைக் கொல்லாமல் விட்டுவிட்டான் என்ற பழியினின்று என்னை மீட்டுக்கொள்ளவே இப்போரைச் செய்தேன்." (100.14) "உயிர் வருக்கங்களைக் கொன்று அவற்றின் புலாலை அமிழ்தினும் இனிதாக உண்டாய். நறவு(கள்) மாந்தினாய், நீ என் போன்றவர்களுக்கும் வைக்கக் கூடிய விருந்து ஏதேனும் உண்டோ?" (10015) - "அழகிய நற்பண்புகள் நின்னை விட்டுப் பிரிந்தன. நல்ல குலத்தில் நீ பிறக்கவில்லை. எவ்விதக் கொள்கையும் இல்லாத புழுப் போன்று நீ மண்ணில் பிறந்தாய் என்பது சரிதான்." (10016) 'நீ ஒருத்தி பிறந்ததால் பெண்மை, பெருமை, நற்குடிப்பிறப்பு, கற்பு எனும் திண்மை, ஒழுக்கம், தெளிவு, சிறப்பு, உண்மை ஆகியவை பாழ்பட்டு ஒழிந்தன. எப்படிக் கொடைக்குணம் இல்லாத ஒரு மன்னன் புகழ் மாயுமோ, அதுபோல மேலே சொன்னவே நீ பிறந்ததால் மாய்ந்தன.” (10017) "உயர்குலத்தில் தோன்றிய மகளிர் கணவனைப் பிரிந்த காலத்துத் தம் பொறிபுலன்களை அடக்கித் துறவுக் கோலம் பூண்டு தம் கூந்தலைச் சடையாக வளர்த்துக் கற்பு நெறி காப்பர். அதற்கு ஒர் இழுக்கம் நேர்ந்தால் உயிரை விடுவர்." (10018)