பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310 கிே இராமன் - பன்முக நோக்கில் "நான் என்ன சொல்ல வேண்டியிருக்கிறது.! உன் ஒழுக்கச் செய்தி என் உணர்வையே வெட்டிச் சாய்த்தது. ஒன்று இறந்துபோ, அல்லது உனக்குப் பிடித்தமான வழியை மேற்கொள்." (100.19) சிறை இருந்து மீண்ட செல்வியைப் பார்த்து தசரதராமன் பேசியதாக இப் பாடல்கள் அமைந்துள்ளன. இத்தனை பாடல்களிலும் அவள் அந்நிய நாட்டில் சிறையிருந்தாள் என்று சொல்லப்பட்ட ஒன்றைத் தவிர எஞ்சிய அனைத்துக் குற்றச்சாட்டுகளும் வேண்டுமென்றே சொல்லப்பட்டவை ஆகும். அதிலும் ஒரு வேடிக்கை என்னவென்றால், அவள் சிறையிருந்த காலத்தில் அவளைச் சென்றுகண்டார் யாருமில்லை, அனுமனைத் தவிர. அந்த அனுமனும் சாதாரணமானவன் அல்லன். மாபெரும் அறிஞனும், கல்விக் கடலைக் கரை கண்டவனும், மாதர் நலம் பேணாதவனும், உலகிற்கெல்லாம் ஆணி என்று போற்றப்பட்டவனும் ஆவான். அவன் ஒருவன்மட்டும்தான் பிராட்டி அசோக வனத்தில் இருக்கும்பொழுது பிறர் அறியாமல் தன்னை மறைத்துக்கொண்டு ஒரு மரத்தின் மேல் இருந்துகொண்டு கீழே நடைபெறும் எல்லா நிகழ்ச்சிகளையும் கண்ணில் கண்டு காதால் கேட்டவன். தம்பி தொடுத்த பர்ணசாலையில் அன்று உடுத்த அதே உடையுடன் மென் மருங்குல் போல் வேறுள அங்கமும் வாடி, வறட்சிக் காலத்தில் பாறைகள் நடுவே முளைத்த மருந்துச் செடிபோல் உடல், உள்ளம், உயிர் என்றனைத்தும் வாடிஇருந்தவளை நேரே கண்டவன் அவனேதான். அவன் மரத்தின் மேலே இருக்கும் பொழுதுதான் இராவணன் அவளை நாடி வந்து கீழே விழுந்து வணங்கி, "மதிக்கு மேனி தோற்பித்தீர்” என்று என்பால் இரங்குவீர் என்று அவன் கேட்டதையும் பிராட்டி அவன் அழிவை அவனே வரவேற்றுக் கொள்ளுகிறான் என்றுதுச்சமாகப் பேசியதையும் நேரில் கண்டவன் அனுமன் ஒருவன்தான். அதே அனுமன்தான் இராகவனிடம் மீண்டு சென்று, தவம் செய்த தவமாம் தையல் தன் பிறந்த குடியையும்,