பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராட்டியும் இராமனும் 38 317 என்ன பயன்? நாடகத் தலைவனே முன்பின் யோசியாதவன் போல் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசும்பொழுது, அவன் எதிரே அவனை மறுத்துப் பேச இம்மூவருக்கும் தைரியம் இல்லை. இராவணன் செய்கை தவறு என்று அறிந்திருந்தும் அதனைச் சகித்துக்கொண்டு அதனோடு இத்துணைக் காலம் வீடணன் வாழவில்லையா? இராமனுக்குரிய நன்றிக் கடனை மறந்து, குடிபோதையில் மயங்கிக் கிடந்த சுக்கிரீவன் செய்வது தவறு என்று அறிந்திருந்தும் அதைப் பொறுத்துக்கொண்டு அனுமன் அவனுடன் வாழவில்லையா? அப்படிப்பட்ட இவர்கட்கு இராமனைப் பார்த்து, நீ தவறு பேசுகிறாய்” என்று எதிர்த்துச் சொல்ல வாய்யில்லாமல் போனதில் வியப்பு ஒன்றுமில்லை. ஆனால் இலக்குவன் நிலைமை சற்று மாறுபட்டது. நடக்கும் கொடுமையைத் தட்டிக் கேட்க மனத் திடம் இல்லாமல் வாயை மூடிக்கொண்டிருப்பது வேறு, அந்தக் கொடுமைக்குத் தானும் ஒரு கையாளாக இருந்து தீமூட்டிக் கொடுப்பது வேறு. இந்த இடத்தில் ஒர் ஐயம் எழுவது இயல்பே. இராமனுக்கு முடியில்லை என்றவுடன், முடி இல்லாமல் செய்தவர்களை விண்ணுலகம் அனுப்புகிறேன் என்று இராமனிடமே மாறுபட்டுப் பேசிய இலக்குவன், பொன்மான் விஷயத்தில் இராகவன் தவறான முடிவுகளை எடுக்கிறான் என்ற ஐயம் ஏற்பட்டவுடன் அவனை எதிர்த்து நீண்ட வாதம் புரிந்த இலக்குவன், இப்பொழுது இவ்வளவு கொடுமையான ஒரு நிகழ்ச்சி நடைபெறும்பொழுது ஏன் அண்ணனை எதிர்த்துப் பேசவில்லை என்ற வினாத் தோன்றுதல் நியாயமானதே ஆகும். இதற்கு இரண்டு காரணங்கள் உள. தான் தெய்வமாக மதித்துப்போற்றி, வணங்கி வழிபடும் இவ்விருவரும் கணவன், மனைவி ஆதலால் அவர்களிடை ஏற்பட்டுள்ள பிரச்சனையில் தான் தலையிடுவது சரியில்லை என்று இலக்குவன் நினைத்து விட்டான் என்பது ஒன்று. மேலும் யாவரும் எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய பொய்க் குற்றச்சாட்டுகளைக் கூறி அவள் தீயில் மூழ்க உடன்படுகிறான் இராமன் என்றால் இதில்