பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனுமனும் இராமனும் ே 339 கண்டு சேர்த்துக் கொள்வதற்காகவே கவந்தனும், சவரியும் சுக்கிரீவனிடம் போகுமாறு இராமனைப் பணித்தனர். சுக்கிரீவன் இல்லாமல் மாருதியைப் பெறமுடியாது. ஆதலால், இழைக்கின்ற விதி சவரி வடிவமாக வந்து இராமனை வழிநடத்திற்று. மேலும் இராவண வதம் நடைபெற வேண்டுமானால் அவனுக்கு முன்னர் வாலி இறக்க வேண்டும். இன்றேல் அவர்கள் இருவர் இடையேயும் இருந்த நட்புக் காரணமாக வாலி இராவணனுக்குத் துணையாக வந்தே சேருவான். போர்க்களத்தில் அவனுடன் நேர் நின்று போர் செய்தல் இயலாத காரியம். எனவே, வாலியை முன்கூட்டியே கொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இவை அனைத்தையும் முன்கூட்டியே திட்டமிட்டவிதி, இராமனைக் கவந்தனிடமும், சவரியிடமும் செல்லுமாறு செய்து அதன் பயனாக இராமனுக்கு அனுமன் கிடைக்குமாறு செய்ததுடன் வாலியையும் ஒழியுமாறு செய்தது. வீடணனை ஏற்றுக் கொண்டது அனுமன் அமுத வார்த்தையால் சீதை, இராமன் இருவருக்கும் மாபெரும் உதவி செய்த அனுமன் மற்றொன்றையும் செய்திருக்கிறான். ஆழ்ந்து நோக்கினாலொழிய அவன் செய்த இந்த உதவிபற்றி யாரும் பெரிதுபடுத்திப் பார்ப்பதில்லை. வீடணனைச் சேர்த்துகொள்ளலாமா வேண்டாமா என்ற பிரச்சனை வந்தபொழுது சுக்கிரீவன் உள்ளிட்ட அனைவரும் அவனைச் சேர்ப்பது கூடாது என்றே கூறிவிட்டனர். இக்கட்டான நிலையில் உள்ள இராகவன் மாருதியின் கருத்தை நாடினான். அங்குக் கூடியிருந்தோர் அனைவரிலும் அறிவாலும், கல்வியாலும், அனுபவத்தாலும் நுண்மாண் நுழைபுலத்தாலும் பலமடங்கு மேம்பட்டவன் அனுமன் என்பதை இராகவன் அறிவான். பகைவர் கூட்டத்திலிருந்து வந்தான், எனவே அவனை ஏற்றுக் கொள்ளக்கூடாது' என்பது உணர்ச்சி வசப்பட்ட முடிவாகும். .