பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 38 இராமன் - பன்முக நோக்கில் ஆனால், முறித்தவன் யார் என்பதை அறியுமுன்னர்ச் சீதை பெருங் கவலைக்கு உள்ளானாள். காரணம், தான் காதல் கொண்டவன் யார் என்பதை அறிந்துகொள்ளப் பிராட்டிக்கு வாய்ப்பு இல்லை. நீலமாலை கூறிய செய்தியிலிருந்து தான் காதல் கொண்டவனும் வில்லை ஒடித்தவனும் ஒருவனே என்பதைப் பல்வேறு சுற்றுப்புறச் செய்திகளால் அறிய முடிகிறது. அறிந்தவுடன் பெருமகிழ்ச்சி கொண்டாள். இதுவே கம்பன் வரையும் ஓவியம். நீலமாலை சீதையிடம் வந்து "தசரதன் மைந்தன், இராமன் என்பது பெயர் என்பதோடு நிறுத்தாமல் இளைய கோவொடும், பராவரு முனியொடும் பதிவந்து எய்தினான் (கம்ப. 724) என்று கூறி, அவன் தோளின் வாங்கினான் அவை நடுக்குற முறிந்து வீழ்ந்தது, (கம்ப. 725 என்றும் கூறினான். இதனை செவியுற்ற சீதை, கோமுனியுடன் வருகொண்டல் என்றபின் தாமரைக் கண்ணினான் என்ற தன்மையால் ஆம்! அவனே கொல்! என்று ஐயம் நீங்கினாள். - கம்ப. 727. (கோமுனி - இராஜ ரிஷியாகிய விசுவாமித்திரன் கொண்டல் - மேக நிறங்கொண்டவன்) என்கிறான் கம்பன். இந்தக் கற்பனையைக் கம்பன் செய்வதற்கு உதவியது முன்னர்க் கண்ட பழம்பாடல் என்பது தெளிவு. எனவே, கவிச்சக்கரவர்த்தி கம்பன் தமிழ் மொழியில் தோன்றிய பல்வேறு இலக்கண இலக்கியங்களையும் உண்டு, தேக்கெறிந்து அவற்றைத் தன் வசமாக்கிக்கொண்டு, தேவை ஏற்படும் பொழுது முன்னோர் மொழி பொருளையும், அவர் சொன்ன சொற்களையும் பொன்னேபோல் போற்றித் தன் பாடல்களில் பதித்துக் கொண்டான் என்பது தேற்றமாகிறது. இனி, நச்சினார்க்கினியர், தொல் காப்பியப் பொருளதிகாரத்தில் புறத்திணை இயல், உழிஞைத் திணையின்