பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனுமனும் இராமனும் ே - 343 நீ இன்றுபோல் என்றும் இருப்பாயாக’ என்ற மாபெரும் ஆசியை வழங்கினாள் உலகமாதா. இதனைக் கம்பன், "பாழிய பணைத்தோள்வீர! துணை இலேன் பரிவு தீர்த்த வாழிய வள்ளலே! யான் மறுஇலா மனத்தேன் என்னின் ஊழி ஒர் பகலாய் ஒதம் யாண்டு எலாம், உலகம் ஏழும் ஏழும் விவுற்ற ஞான்றும், இன்று என இருத்தி என்றாள்" - கம்ப. 5299 என்ற பாடலில் நன்கு விளக்குகிறான். ஒர் உதவி செய்யப் பெற்ற பிராட்டியே தன்னை வாழ்த்தினாள் என்றால், பல உதவிகளைப் பெற்ற பெருமாள் தன் பக்தனுக்கு எப்படி நன்றி பாராட்ட முடியும்? வீடு பேற்றைக்கூடக் கருதாமல், வீடும் வேண்டா விறலினனாக' தொண்டிற்காகவே தொண்டைச் செய்யும் இந்த அனுமனுக்கு என்ன செய்வது என்று இராகவனே பலமுறை சிந்தித்தான். ஒருமுறை தசரதன் பிள்ளைகளாகிய நாங்கள் நால்வரும் இறந்துபட்டு, நெறியில் தோன்றிய நின்னில் தோன்றினோம் என்று போர்க்களத்தில் செய்த உதவிக்கு நன்றி செலுத்திவிட்டான். இந்த நன்றியுரை உபசார வழக்கன்று, உண்மையே என்பதை அறிய வேண்டும். பகவான் பாகவதர் உள்ளத்தில் ஒருங்கிவிடுகிறான். ஆதலின், நின்னில் தோன்றினோம் என்று கூறியது முற்றிலும் உண்மையே ஆகும். விடை கொடுத்த படலத்தில் முடிசூட்டிக் கொண்ட பெரிய பெருமாள் - வீடணன், குகன், சுக்கிரீவன், அங்கதன் ஆகிய அனைவருக்கும் பெரும் பரிசுகளை வாரி வழங்கி விடை கொடுத்தான். கை கட்டி வாய் பொத்தி, அகங்கார, மமகாரமற்ற தொண்டின் வடிவமாக நிற்கும் பரம பாகவதனாகிய அனுமனை நீண்ட நேரம் பார்க்கிறான் பரம்பொருள். படைப்புக் காலத்திலிருந்து எத்தனையோ பக்தர்களையும், தொண்டர்களையும் அவன் கண்டதுண்டு. அவர்களுள் பலரும் சிறிய பரிசில் முதல், பெறலரும்