348 38 இராமன் - பன்முக நோக்கில் எழுந்த தசரதன், முனிவன் எதிரே நின்று கை கூப்பி வணங்கி, தங்கள் ஆணையை எதிர்பார்த்து நிற்கின்றேன் என்றான். உடனே முனிவன் பின்வருமாறு பேசலானான்: “தருவனத்துள் யான் இயற்றும் தகை வேள்விக்கு இடையூறா, தவம் செய்வோர்கள் வெருவரச் சென்று அடை காமவெகுளி என, நிருதர் இடை விலக்கா வண்ணம், "செருமுகத்துக் காத்தி" என, நின் சிறுவர் நால்வரினும் கரிய செம்மல் ஒருவனைத் தந்திடுதி என, உயிர் இரக்கும் கொடுங்கூற்றின், உளையச் சொன்னான்." - கம்ப 324 ‘அரசே! தவம் செய்வோருக்குக் காமம், வெகுளி, மயக்கம் என்னும் மூன்றும் அகப்பகைகள் இருந்துகொண்டு அவருக்குத் துன்பம் இழைப்பது போல வனத்துள் நான் இயற்றும் தவ வேள்விக்கு இடையூறாகப் புறப் பகைவர் களாகிய நிருதர்கள் தவத்தைத் தொடர விடுகின்றிலர். அவர்களை ஒழித்து இடையூறு வராதபடி காக்க உன்னுடைய பிள்ளைகள் நால்வரில் கரிய செம்மல் ஒருவனைத் தந்திடுக" என்று கூறினானாம். அது எவ்வாறு இருந்ததென்பதை அற்புதமான ஒர் உவமை மூலம் கவிச்சக்கரவர்த்தி விளக்குகிறான். ஒருவன் உத்தரவில்லாமல் நினைத்த நேரத்தில் உயிரைக் கொண்டுபோகும் எமன், திடீரென்று வந்து 'உன்னுடைய உயிரை எனக்குத் தர வேண்டும் என்று பிச்சை எடுப்பது போல் கேட்டால், அது எவ்வாறு இருக்குமோ, அதுபோல விசுவாமித்திரர் இப்போது கேட்டுக்கொண்டார். வேலொடு நின்றான் இடு என்றது போலாம் கோலொடு நின்றான் இரவு என்ற குறளின் (52) உவமையை இது நினைவூட்டுகிறது. விசுவாமித்திரன் வேண்டுதலைக் கேட்ட தசரதன் நடுங்கி ஒடுங்கி விட்டான். ஏற்கெனவே, உடம்பில் உள்ள புண்ணில்
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/368
Appearance