முனிவர்களும் இராமனும் 38 349 கனல் நிறைந்தது போல விசுவாமித்திரன் சொற்கள் தசரதன் செவியில் புகுந்தனவாம். நீண்ட காலம் கண்ணில்லாத ஒருவன், திடீரென்று கண்ணைப் பெற்று, அந்த இன்பத்தை அனுபவித்துக்கொண்டிருக்கும் வேளையில் அவனையும் அறியாமல் கண் மறுபடியும் போய்விட்டால் என்ன கவலை அடைவானோ, அதே கவலை தசரதன் பெற்றான். அதாவது, கனகாலம் பிள்ளைப்பேறு இல்லாமல் இருந்த தசரதனுக்குப் பிள்ளைகள் பிறக்கவே மகிழ்ச்சிக் கடலில் துளையமாடிக் கொண்டிருந்தான். அந்தப் பிள்ளையை இப்பொழுது விசுவாமித்திரன் கேட்கிறான்! பிள்ளையைக் கொடுக்க மனமில்லாத தசரதன் தானே வந்து அப்பணியைச் செய்வதாகத் கூறினான். இந்த வார்த்தையைக் கேட்டதும் விசுவாமித்திரன் எல்லையற்ற கோபம் உடையவனாய், புருவங்களை நெரித்து, கனல் கக்கும் கண்களோடு ஒரு சிரிப்புச் சிரித்தான். விசுவாமித்திரன் கோபம் தன் சொல்லை தசரதன் தட்டிப் பேசினான் என்பதற்காக வந்தது அன்று. வெளியில் சொல்ல முடியாத ஒரு மாபெரும் காரியத்தைச் செய்ய முனைந்து வந்துள்ளான். பிராட்டி திருமணம் நடக்க வேண்டும்; தெய்வப் படைகள் பல இராமனிடம் வந்து சேர வேண்டும்; அவதார நோக்கம் நிறைவேற இவை நடைபெற வேண்டும். தேவ ரகசியமான அதை வெளிப்படையாகத் தசரதனிடம் கூறவும் முடியாது. எனவே தான், விசுவாமித்திரன் கோபம் எல்லை கடந்ததாயிற்று. கோப சாபங்களுக்குப் புராண அரங்கில் பெயர் பெற்ற விசுவாமித்திரன் இப்போது கொண்ட கோபம் சற்று வேறுபட்ட ஒன்றாகும்; தேவரகசியத்தை வெளியே சொல்ல முடியாமல் மறைத்ததால் விளைந்தது; சற்றே நாடகமாடுவதாகவும் கொள்ளலாம். என்ன திட்டத்தோடு விசுவாமித்திரன் இங்கு வந்துள்ளான் என்பதைத் தசரதன் உள்பட யாரும் அறியவில்லை. ஆயினும், இந்த முனிவனின் அகமனத்தின் ஆழத்தில் ஒடிய எண்ணங்களை, இவனை ஒத்த மற்றொரு
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/369
Appearance