பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364 38 இராமன் - பன்முக நோக்கில் இதன்படி சீதேவியும் பூதேவியும் சேரும் தோள்களை உடையவன் என்று கவிஞன் கூறும்பொழுது மூல ராமனையே குறிக்கின்றான் என்பது அங்கு விளங்கும். வசிட்டன் எவ்வளவு உயர்ந்தவனாயினும் இம்மூலப் பரம்பொருளுக்குச் சூட்டினான் என்று கூறுவது பொருத்தமுடையதாகப் படவில்லை. எனவே, வசிட்டன் மெளலி புனைந்தான் என்ற பாடலில் யாருக்கு ப் புனைந்தான் என்பதை வெளிப்படையாகக் கூறாத கவிஞன், இந்தப் பாடலில் அவன் யார் என்பதை விளக்கமாகக் கூறியவுடன் வசிட்டன் பேரை விட்டு விட்டு, தோளான் மோலிசூடினான்' என்று தன்வினை வாய்பாட்டால் கூறிய துட்பம் அறிந்து போற்றுதற்குரியதாகும். முனிவர்களின் பொதுநிலை குகனை விடுத்து நீங்கியபின் இராமபிரான் சந்தித்த முனிவர்கள் பெரும்பாலும் அவன் உதவியை நாடியவர்களாகவே அமைந்தனர். அரக்கர்களால் பல துன்பங்களை அடைந்தனர் என்பது சாதாரணத் துன்பம். முனிவர்களாக வாழ்கின்றவர்கள் பிறர் பொருட்டுச் செய்யும் தவத்தை மேற்கொள்ள வேண்டியவர்கள். அந்த உயர் நோக்குடைய தவத்திற்கு ஊறு செய்ததே அரக்கர்கள் இழைத்த பெருந்துன்பமாகும். இந்தத் துன்பத்திலிருந்து தங்களை விடுவிக்க வேண்டுமென்று இராகவன் பால் வேண்டிக் கேட்டுக் கொண்டவர்களாகவே பெரும்பாலான முனிவர்கள் அமைந்துள்ளனர். முனிவர்கள் தவமுடையோராதலின், அரக்கர்களைச் சாபம் முதலியன கொண்டு வேள்விகளையும் தங்களையும் காத்துக் கொள்ளலாமே, இராமன் உதவியை அவர்கள் நாடவேண்டுமா என்ற தடை எழுவது இயல்பே. இந்த இடத்தில் தவத்திற்கு வள்ளுவப் பேராசான் கூறிய இலக்கணத்தை நினைவுகூர்வோமேயானால், தெளிவு பெறமுடியும். நேரிடும் துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளுதலும் தமக்கு வரும் துன்பத்தையே பெரிதாக