பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366 38 இராமன் - பன்முக நோக்கில் இனியது ஒர் சாலை கொண்டு ஏகி, இவ்வயின் நனி உறை என்று, அவற்கு அமைய நல்கி, தாம் தனி இடம் சார்ந்தனர்; தங்கி, மாதவர் அனைவரும் எய்தினர், அல்லல் சொல்லுவான். - கம்ப 2640 முனிவர்கள் அனைவரும் இராமனிடம் தங்கள் அல்லல் சொல்வதற்கு வந்தார்கள் என்று பாடல் சொல்வதைக் குறித்துக் கொள்ளவேண்டும். அவர்கள் செய்து கொண்ட முறையீட்டைப் பல பாடல்கள் வாயிலாக அறிகிறோம். (2642 - 2646) அரக்கர் தந்த தொல்லையால் அருந்தவத்துறையினின்று நீங்கிவிட்டதாகவும் (2642), அறநெறித் துறையிலிருந்தும் நீங்கிவிட்டதாகவும் (2643) கூறிவிட்டு, மாதவத்து ஒழுகெலெம் மறைகள் யாவையும் ஒதலெம், ஒதுவார்க்கு உதவல் ஆற்றலெம்; மூதெரி வளர்க்கிலெம்: முறையின் நீங்கினோம் ஆதலின், அந்தணரேயும் ஆகிலேம். - கம்ப 2644 எனத் தொகுத்தும் தம் அவல நிலையை விளக்கினர். தவநெறியில் ஒழுகவில்லை, வேதங்கள் ஒதவிலலை, ஒதுவோர்க்கு உதவ முடியவில்லை, நெருப்பை வளர்த்து வேள்வி செய்யவில்லை, எல்லா வகைகளிலும் முறையைப் பேண வில்லை . ஆகையால் தண்ட காரணியத்து முனிவர்களை அந்தணர்கள் என்று எப்படிச் சொல்வது? 'நாங்கள் அந்தணர்கள் என்று சொல்லிக்கொள்ளும் தகுதியையும் இழந்துவிட்டோம் என்பது முனிவர்களின் முறையீடு. வேள்வி நாயகன் என்று இந்திரனைச் சொல்லுவார்கள். அவன் உதவியை இந்த முனிவர்கள் நாடியிருக்கலாமே என்றொரு வினா எழும். இந்திரனா? அவன் அரக்கர்கள் ஏவியவற்றையே சிந்தையிலும் சென்னியிலும் கொண்டு