பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனிவர்களும் இராமனும் ே 37; தன்னை வணங்கி எழுந்த இராமனைத் தழுவிக் கொண்டு குறுமுனி, "ஐயனே! முழுமுதல் வைத்திருந்த வில்லும், அம்புப் புட்டிலும் இதுவரை என்னால் பூசிக்கப் பெற்றுப் பாதுகாக்கப் பெற்று இருந்து வந்தது. இதை ஏற்றுக் கொள்வாயாக." என்று கூறிவிட்டு அவை இரண்டையும் இராமனிடம் அளித்தான். இனி, அடுத்த பாடலில் மூன்றுலகத்திலும் ஒப்புமை சொல்லமுடியாத வாளையும், சிவபெருமான் திரிபுரம் எரித்தபொழுது பயன்படுத்திய அம்புபோன்ற பல அம்புகளையும் தந்தான். அகத்தியனிடம் பெற்ற வில் இந்த இரண்டு பாடல்களிலும் குழப்பம் நிரம்ப உள்ளது. முழு முதல்வன் வைத்திருந்த வில் திருமாலுடைய வில் என்று சிலரும், சிவபெருமானுடைய வில் என்று சிலரும் பொருள் கூறுவர். மூலநூலாகிய வான்மீகத்தில் இது திருமாலுடைய வில் என்றே சொல்லப்படுகிறது. இருப்பினும், கம்பநாடன் அதற்கு மாறுபட்டுப் பாடியதற்கு ஒரு காரணம் உண்டு. விசுவகர்மா சமைத்த இரண்டு விற்களில் ஒன்றைத் திருமால் ஏற்க, மற்றொன்றைச் சிவன் ஏற்றான் என்றும், சிவனுடைய வில் இற்றுப் போயிருந்தது என்றும், சனகன் எதிரே இந்த வில்லைத்தான் இராமன் முறித்தான் என்றும் சொல்லப்பட்டமையின் சிவதனுசின் கதை முதலிலேயே முடிந்து விட்டது; எஞ்சிய விஷ்ணுவின் வில் இந்திரனிடம் ஒப்படைக்கப்பட அது வரிசையாக வந்து பரசுராமனிடம் சேர்ந்தது. திருமணம் செய்துவரும் தசரதராமனை எதிர்த்த பரசுராமன்,"இராமா! நீ உடைத்தது இற்றுப்போன சிவதனுசு ஆகும். உன்னிடம் வன்மை இருந்தால், இந்த விஷ்ணு தனுசை வாங்குவாயாக" என்று கர்வத்துடன் பேச, அந்த வில்லை வாங்கி அதை வளைத்து நாணேற்றி, அம்பு கோர்த்துப் பரசுராமன் தவத்தை ஒழித்த பிறகு இராமன் அந்த வில்லை வருணனிடம் கொடுத்து வைத்திருந்தான் என்றும், கானகத்தில் கரனுடன் போர் செய்யும்பொழுது இராமன் கையில் இருந்த