பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376 38 இராமன் - பன்முக நோக்கில் என்பதற்கு, பரத்துவாசன் என்று பொருள் செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகாது. இப்பொழுது பாடலின் பொருளைப் பார்ப்போம். நெடியோனாகிய இராகவன் தன் அடியில் வீழ்ந்தவுடன் அவனை எடுத்து அனைத்து (பரத்துவாச முனிவன்) சிறந்த ஆசிகள் வழங்கி, இராமனை உச்சிமுகந்து, தாமரைக் கண்ணனாகிய இராமனுடைய சடையிலுள்ள துருகப்படலத்தைக் காதலோடு கலந்த கண்ணாகிய கலசத்தின் மூலம் நீராட்டினான். (10135) இரண்டு பாடல்களுக்கு முன்னர் நெடியோன் என்ற சொல்லால், இராமனைக் குறித்த கவிஞன், இப்பாடலில் அதே சொல்லைக் கொண்டு முனிவனைக் குறிக்க மாட்டான். மேலும் இராமகாதையில் இச்சொல்லை இராமனுக்கே அவன் பயன்படுத்துகிறான் என்பதையும் நினைவில் கொள்வது நலம். இந்த நெடியோன் என்பது சாதாரணப் பொருள் தந்து இராமனைக் குறிக்கின்றது. இவ்வாறன்றி நெடியோன் என்பதற்கு உயர்வற உயர்நலம் உடையவன் என்ற பொருளைக் கொண்டாலும் தவறில்லை. தன் அடியார்களை முழுவதுமாக ஏற்றுக் கொள்ளுகிற இறைவன், அந்த அடியார்களின் கால், தலை என்ற வேறுபாடு காண்பதில்லை. தன்னை அணைத்துக்கொண்ட பரத்துவாசன் கண்ணிர் மழையால் ஆட்டியதை இறைவன் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறான். இக்கருத்தைத் தெளிவாகக் கூறவந்த பாசவதைப் பரணி நூலாசிரியர் " என்பாவம் ஆறு, கடல் ஏழிருந்தும், என் அம்மை,அன்பாளர் கண்ணருவி ஆடுவது திருவுள்ளம்" என்று பாடியதை இங்கு நினைவுகூர்தல் நலம். கண்ணப்பர் வரலாறும் இதனை நினைவூட்டுவதை அறியலாம். அன்றியும், நெடியோன் அடியின் வீழ்தலும் என்று கூறும்பொழுது வீழ்தல் என்ற சொல் தனிச் சிறப்பைப்