பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

382 38 இராமன் - பன்முக நோக்கில் வருவதற்குப் பன்னெடு நாட்கள் முன்னரே, இலக்குவன் துணைகூட இல்லாமல், இராமன் தான் ஒருவனாக நின்று பல்லாயிரவருடன் போர் செய்த ஒரு நிகழ்ச்சியும் உண்டு. கரன்,துரடணன், திரிசிரா ஆகிய மூவரையும் அவர்களுடன் வந்த பல்லாயிரக் கணக்கான படைகளையும் மூன்று கடிகையில் விண்ணில் ஏற்றிய பெருமை இராகவனுக்கு உண்டு. இராமன் கையால் உயிர் இழந்த கரன், துரடணன், கும்பகர்ணன், இராவணன் ஆகியோரில் க ர துடணர்கள் ஒருவகை, கும்பன் வேறு வகை, இராவணன் மற்றொரு வகை. இம் மூவகையினரையும் கூட்டு ஒருவரையும் வேண்டாக் கொற்றவன்' தான் ஒருவனாகவே நின்று வெல்கிறான். மூன்று இடத்திலும் வெல்பவன் இராகவன் ஒருவன்தான். அப்படியானால், இம் மூவருள் உள்ள வேறுபாடு என்ன என்பதைச் சிந்திப்பது நலம். - கரன் சூர்ப்பனகையின் சொல்லைக் கேட்டுக் கேவலம் இரண்டு ஆண்களும், ஒரு பெண்ணும்தான் தங்களுக்கு எதிரிகள் என்று நினைத்து எதிர்த்து வந்தவர்கள் கர துடனர்கள். இதில் பெரும் படையுடன் முதலில் வந்து அழிந்தவர்கள் துடணனும் திரிசிராவும். இவர்கள் இத்துணைப் பேரையும் ஒருவனாக நின்று கொன்றானே, அப்படிப்பட்ட இவன், யாராக இருத்தல் வேண்டும் என்ற சிந்தனை கரன் மனத்தில் ஓடியதாகத் தெரியவில்லை. துடணன், திரிசிரா முதலியோர் இறந்த பிறகும் இவன் மானுடன் என்ற எண்ணம் கரன் மனத்தை விட்டு விலகவில்லை. என்றாலும், கரன் சாதாரணமானவன் அல்லன் என்பதற்கு அடையாளம் இராமனுடைய வில் முறிந்ததே ஆகும். இதுவரை இராமன் கையில் வைத்திருந்த வில் தாடகை, துடணன், திரிசிரா என்பவர்கட்குப் போதுமானதாக இருந்தது. இனி நடைபெறப்போகும்