பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரக்கர்களும் இராமனும் 38 385 புன்தொழிலினால் இசை பொறுத்தல் புலமைத்தோ?" - - கம்ப 6120 "சிட்டர் செயல் செய்திலை குலச் சிறுமை செய்தாய்" - கம்ப 8123 "...06:32, 26 பெப்ரவரி 2016 (UTC)~~ ஒருவனே சிலை வலத்தால், கரன் படை படுத்து, அவனை வென்று, களைகட்டான், . கம்ப 6124 என்ற இவ்வாதங்களில் முதலில் அறிவு அமைந்தாய் என்று கூறி அறிவின் துணை கொண்டு தன் செயலை ஆராயுமாறு இராவணனை வேண்டினான். அடுத்து,"பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர் (புறாநா. 182) என்ற புறப்பாடலையும், "கழியக் காதலர் ஆயினும் சான்றோர் பழியோடு வரூஉம் இன்பம் வெஃகார் (அகநா. 12) என்ற அகநானூற்றுப் பாடலையும் நினைவில் கொண்டு கும்பகருணன் சொன்ன கருத்தினைக் கணித்தல் வேண்டும். இராவணன் பழிக்கு அஞ்ச வேண்டும் என்ற கருத்தில் கூறுபவன் போல பாவியர் உறும்பழி இதின் பழியும் உண்டோ? என்று அச்சுறுத்தினான். அறிவு வாதமும், பழி அச்சமும் இராவணன்பால் எடுபடவில்லை என்பதை அறிந்த கும்பகர்ணன், இசைபட வாழவேண்டும் என்று விரும்பும் இராவணனைப் பார்த்து, புன் தொழிலினால் இசையோடு வாழ்தல் இயலாது என்பதையும் எடுத்துக் காட்டினான். அதற்கடுத்தபடியாக இராவணன் மனத்தில் உயிர் அச்சத்தை உண்டாக்குபவன் போலக் கரன் கதையை எடுத்துக் கூறினான். மந்திராலோசனையில் கும்பனுடைய வாதங்கள் செல்லுபடியாக வில்லை என்றாலும், அவனை அறிந்து கொள்ளுதற்கு இவை உதவுகின்றன. - 25-وفى