பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பனும் பல்வேறு இராமாயணங்களும் 38 23 நீண்டகால ஆராய்ச்சிக்குப் பிறகு, முதலாவதாக உள்ள பாலகாண்டமும் பிற்சேர்க்கையே என்ற முடிவுக்கு வந்தள்ளனர். அயோத்தியா காண்டம் தொடங்கி யுத்த காண்டம் முடிய உள்ள பகுதிகளில் இராமனைக் கடவுளாகக் காட்டும் இடங்கள் யுத்த காண்டத்தில்தான் இரண்டு, மூன்று இடங்களில் உள்ளன. எனவே, வான்மீகியைப் பார்த்துத் தான் கம்பன் இராமனைக் கடவுளின் அவதாரம் என்று பாடுகிறான் என்பவர்களின் கூற்றும் வலுவுடையதாகத் தெரியவில்லை. இதுபற்றிப் பின்னரும் விரிவாக ஆராயப்படும். முழுமுதலைக் கூறுபோடுவதா? வான்மீகியின் பாலகாண்டத்தை முழுவதுமாகக் கம்பன் ஏற்கவும் இல்லை, முழுவதுமாக ஒதுக்கவுமில்லை. வான்மீகியின் பாலகாண்டத்தில்தான் திருமால் இராமனாக அவதரித்தார் என்ற கருத்துப் பேசப்படுகிறது. அதிலும் அவர் கூறும் சில செய்திகளைக் கம்பன் ஏற்கவில்லை. உதாரணமாக, இராமபிரானுடைய அவதாரத்தைப் பற்றிக் கூறவந்த வான்மீகி பாலகாண்டம் 18வஆது சருக்கத்தில் திருமாலின் பாதி அம்சமாக இராமன் தோன்றினான் என்றும், எஞ்சியுள்ள பாதி அம்சத்தில் கால் பகுதியாகப் பரதன் தோன்றினான் என்றும், எஞ்சியுள்ள இறுதிகால் பகுதியாக இலக்குவ, சத்துருக்கனர் தோன்றினர் என்றும் கூறுகிறார்." கடவுள் அரைப் பாகம், கால் பாகம் என்று பங்கிட்டுக் கொண்டு அவதரிப்பதை கம்பன் ஏற்றுக்கொள்ளவில்லை. நட்சத்திரம், லக்கினம் மாற்றம்? இராமபிரான் திருஅவதாரத்தைப் பின்வரும் பாடலால் கூறுகிறான்: ஒருபகல் உலகு எலாம் உதரத்துள் பொதிந்து அருமறைக்கு உணர்வு அரும் அவனை, அஞ்சனக் கருமுகில் கொழுந்து எழில் காட்டும் சோதியைத் திருஉறப் பயந்தனள் திறம்கொள் கோசலை. - கம்பன் 282