பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390 38 இராமன் - பன்முக நோக்கில் புறநிலைக் கணிப்பிலே இது கும்பகருணன் பெற்ற தோல்வியே யெனினும், அக நிலைக் கணிப்பிலே அவன் பெரும் பேறு பெற்றவனாகிறான். கும்பகர்ணன் இரு துருவ இணைப்பு தொடக்கத்தில் இருந்தே கும்பன் என்ற மாவீரன் தன்னலம் என்ற சொல்லுக்கே பொருள் தெரியாமல் வளர்ந்து விட்ட பெருமகன் ஆவான். அதனால்தான் இருதுருவங்களாக நிற்கும் இராவணன், வீடணன் ஆகிய இருவரையும் அவனால் ஏற்றுக்கொள்ள முடிகிறது. தன் கைகளையும் கால்களையும் இராமபாணம் வேறு வேறாக்கிய போதும் எவ்வித மனக் கசப்போ துயரமோ சினமோ கொள்ளாமல், மூன்றாம் மனிதனைப் போல, அய்யன் வில் தொழிற்கு ஆயிரம் இராவணர்கள் ஒரு பொருட்டே இல்லை என்று பகைவன் ஆற்றலை போர்க்களத்திலேயே புகழும் பண்பாளன் கும்பன் என்பதை அறிய முடிகிறது. இந்த நிலையிலும் இராவணனைக் காப்பாற்ற முடியாது என்பதை நன்கு அறிந்தவன் ஆதலால் தன் குலத்திற்கு ஒரு கொழுந்தாக எஞ்சி நிற்கும் வீடணனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் இராமனிடம் வரம் கேட்கும் ஒரு மாபெரும் ஞானியாக வளர்ந்து விடுகிறான், கும்பகர்ணன். இராவணன் சூர்ப்பனகை மூக்கறுபட்ட நிலையைக் கண்டு தொடக்கத்தில் அவர்கள் மனிதர்கள் என்று இராவணன் எள்ளியது உண்மைதான். ஆனால், கர துடணர்களும், அவர்களின் படைகளும் ஒரே ஒருவனால் விண்ணுலகம் அனுப்பப்பெற்றனர் என்று கேள்விப்பட்டவுடன் கேவலம் மனிதர்கள் என்று சொல்வதை விட்டுவிட்டு அவர்களை மதிக்கத் தொடங்கி விட்டான். எவ்வாறேனும் சீதையைக் கவர்ந்து வரவேண்டும் என்பதே அவனது தலையாய நோக்கம். அவர்களுடன் போர் செய்து, வென்று, சீதையைக் கவரலாம்