பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392 38 இராமன் - பன்முக நோக்கில் "நாளை வா” 'அமர் பொருமேல் வெல்லும் அத்தனை அல்லது தோற்றிலா விறலோன் (7263) ஆகிய இராவணன், ஒரு தனி மனிதனிடம் மகுடம் முதலியவற்றை இழந்து கட்டை விரலால் பெண்களைப் போல் பூமியைக் கிளறிக் கொண்டு நிற்கும் நிலையை அடைந்து விட்டான். அந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு அவனைக் கொல்லாமல் இராமன் கூறிய சொற்கள் அந்தக் கல்மனக்காரனையும் ஒரு வினாடி நெகிழச் செய்து விட்டன. "அறத்தின் அடிப்படை இல்லாமல் மறம் ஒன்றையே துணையாகக் கொண்டு போரில் வெற்றிபெறுதல் என்பது இயலாத காரியம் என்பதை அறிந்தாயல்லவா. இப்பொழுது உன்னையும், உன் நகரத்தையும் அழிக்க முடியும் என்றாலும் நீ துணை இழந்த தனியனாய் நிற்பதைக் கண்டு அதனைச் செய்யாது விட்டேன்" (7267) "உன்னுடைய உறவினர், பெரும்படை, படைக்கலங்கள் ஆகிய அனைத்தையும் ஒருசேரத் திரட்டிக் கொண்டு வந்து நீ பொருவதானாலும் வருக. இன்றேல் எங்கேனும் சென்று ஒளிந்து கொள்க". (7268) "பிராட்டியைச் சிறை நீக்கம் செய்து, தேவர்கட்கு இடுக்கண் செய்வதை விட்டு உன் தம்பிக்கு முடியை நல்கி அவனுக்கு ஏவல் செய்து நிற்பையாயின் உன் தலையைத் துண்டிக்காமல் விடுகிறேன். (7269) “இலங்கை அரசனே ! உனக்குள்ள எல்லாம் சூறைக்காற்றில் அகப்பட்ட பூளைப் பூபோலச் சிதறியதைக் கண்டாய் அல்லவா. இன்று சென்று விட்டு நாளைப் போர் செய வருக" (727) என்று கூறி அனுப்பிவிட்டான் இராமன். இராகவனுடைய சொற்கள், இராவணன் மனத்தில் பெரு மாற்றத்தை ஏற்படுத்தின என்பதைப் பின்வரும் நிகழ்ச்சிகளால் அறிய முடிகிறது. தன் அரண்மனை சென்ற