பரம்பொருளும் இராமனும் ேே 407 இயலாதிருக்கும் ஆதிதேவர் மூலப் பரம்பொருள் - கேவலம் எம்முடைய சிற்றறிவுக்கு உட்பட்டு அறியப்படுபவரோ? இல்லை என்றபடி முதல் இரண்டடிகளில் சொல்லப்பட்ட கருத்து ஆழ்ந்த சிந்தனைக்குரியது. ஒரு பொருள் எந்த நிலையிலும் பிரிவினை இல்லாதது என்று சொல்லிவிட்டு, அடுத்தபடியாக அப்பொருளில் இருந்து வேறுபட்ட பல்வேறு பொருள்கள் தோன்றினும் என்று கூறுவது மேலாகப் பார்த்தால் குழப்பத்தைத் தரும். பிரிவினை இல்லாத ஒரு பொருள் எப்படித் தன்னிலிருந்து பல்வேறு வகைப்பட்ட பொருள்களைத் தரமுடியும்? பிரிவினை இல்லாத பொருளிலிருந்து அதாவது, முழுப் பொருளிலிருந்து சில வெளிப்பட்டு விட்டால் பிறகு அதனை முழுப் பொருள் என்று எவ்வாறு கூறுவது? இந்த மிக நுண்மையான கருத்தைப் புரிந்து கொள்ளக் கணிதத்தின் உதவியை நாடவேண்டும். பூரணம், முழுப் பொருள், எண்இகந்தது என்பதைக் கணிதத்தில் இன்ஃபினிடி (Infinity) oc என்று கூறுவர். இந்தப் பூரணத்திலிருந்து எவ்வளவை வெளியில் எடுத்தாலும் அது பூரணம்தான். அதாவது, இன்ஃபினிடியில் இருந்து இன்பினிடி கழித்தால் எஞ்சுவது பூஜ்யம் அன்று, இன்ஃபினிடிதான். உ-ம். கணிதம் கண்ட இந்த மாபெரும் கருத்தை, இது பூரணம், அதுவும் பூரணம், பூரணத்திலிருந்து பூரணம் எடுக்கப்பட்டாலும் இதுவும் பூரணம், அதுவும் பூரணம் என்று உபநிடதசாந்தி வாக்கியம் கூறுகிறது. பரம்பொருளுக்குரிய இலக்கணம் பூரணத் தன்மை என்பதாகும். அதிலிருந்து எத்துணைப் பொருள்கள் வெளிப்பட்டாலும், அதன் பூரணத்துவம் குறைவதில்லை என்று உபநிடதமும் கணிதமும் கூறும் கருத்தைத்தான் கம்பநாடன் பேதி யாது' என்று தொடங்கும் இரண்டு வரிகளில் விளக்கம் தருகிறான். இவ்வாறு கூறிவிட்டவுடன் ஏதோ பூரணத்தை அறிந்துகொண்டோம் என்ற எண்னம்
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/428
Appearance