பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

408 38 இராமன் - பன்முக நோக்கில் யாருக்காவது வருமேயானால், அது தவறு என்பதைக் குறிக்கவே வேதம், வேதியர், விரிஞ்சன் ஆகிய அனைவரும் அவனை இன்னும் அறிந்திலர் என்று மூன்றாம் அடியில் கூறுகிறான் கவிஞன். அறிவினால் அறியப்பட முடியாதவன் என்று கூறப்படுவதற்கு முன்னர், உணர்வினால் ஓதி ஒதி உணரும் உணர்வினால் - அவனுடைய நாமத்தை விடாது சொல்லுகின்ற உணர்வு பெற்றோருக்கு நல் உணர்வை நல்குவான் அவன் என்று கூறுகிறான். அதாவது, அறிவால் அறியப்படமுடியாதவனே தவிர நல்லுணர்வால், அதாவது பக்தியால் உணரத் தொடங்கினால், அவ்வுணர்வினுள் நின்றே தன்னை உணர்த்துவான் என்பதையும் கூறினார். வேத வழியில் ஆராய்ந்தால், இது அல்ல; இது அல்ல என்று தான் அவனைச் சுட்ட முடியும். வேதியர் என்ற பொழுது அறிவால் ஆயப் புகுந்த உபநிடதங்கள் இயற்றிய முனிவர்களைக் குறித்தான். இவர்களால் அறியவொண்ணா பரம்பொருளை அவன் அருள் கொண்டு உணர்வினால் உணர்ந்துகொள்ள முடியும் என்பதாயிற்று. இனி அடுத்து வருவது கிஷ்கிந்தா காண்ட கடவுள் வாழ்த்தாகும் "மூன்றுஉரு எனக்குணம் மும்மை ஆம் முதல், தோன்றுஉரு எவையும், அம்முதலைச் சொல்லுதற்கு என்றுஉரு அமைந்தவும், இடையில் நின்றவும், சான்றுஉரு உணர்வினுக்கு உணர்வும், ஆயினான்" - கம்ப. 3708 மூன்று என்று எண்ணப்படும் பலவற்றைக் கூறி அவை அனைத்தும் மூலப்பொருளின் பல்வேறு வகைப்பட்ட வடிவங்களும் நிலைகளும் ஆகும் என்பதைக் கவிஞன் விளக்குகிறான்.