பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

412 38 இராமன் - பன்முக நோக்கில் நன்றே, நம்பி குடி வாழ்க்கை! நமக்கு இங்கு என்னோ பிழைப்பு? அம்மா! - கம்ப. 6059 மேலாகப் பார்த்தால், இப் பாடலின் முதல் மூன்று அடிகளும் ஒன்றுக் கொன்று மாறுபாடு உடைய இரட்டைகளாகக் காட்சி அளிக்கின்றன. ஒன்று என்பதற்கு எதிர் பல; அன்று என்பதற்கு எதிர் ஆம்'; 'இல்லை' என்பதற்கு எதிர் இல்லை. சொல் அளவில், பொருள் அளவில் மாறுபட்டு முரண்பட்டு நிற்கும் இவை குறிக்கும் பொருள்கள் வெவ்வேறானவை என்று நினைப்பது சாதாரண மனநிலை. இந்த மனநிலை, வளர்ச்சி அடைந்து மாற மாற இவற்றினிடையே உள்ள முரண்பாடு மறையத் தொடங்கி விடுகிறது. ஒரே பொருளை ஒன்று என்றும், பல என்றும், உண்டு என்றும் இல்லை என்றும் கூறுவது வியப்பைத் தருகிறதல்லவா? அந்த வியப்பையே அடிப்படையாகக் கொண்டு கவிஞன் நகைச்சுவையுடன் ஒன்றைக் கூறுகிறான். நம்பி என்று சொல்லப்படும் அந்தப் பரம்பொருள் ஒன்று என்றும் பல என்றும், உண்டு என்றும், இல்லை என்றும் கூறப்பெற்றால் அது எது என்று எப்படி ஒரு முடிவுக்கு வரமுடியும்? நம்முடைய சிற்றறிவைக் கொண்டு இதை எப்படி அறிந்து கொள்ளமுடியும்? இப்பாடலின் கருத்து விராதன், சரபங்கன் முதலிய பாத்திரங்கள் வாயிலாகவும்:பேசப்படுதலின் இதனைச் சற்று விரிவாகப் பின்னே பார்க்க்லாம். கவிஞன் நோக்கில் இராமன் கவிஞனின் கடவுள் வாழ்த்துப் பாடல்கள் ஆறினையும் ஒன்றாக இனைத்துப் பார்க்கும்பொழுது அவன் கண்ட சில முடிவுகளை நாம் அறிய முடிகிறது. அவை வருமாறு: (1) படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய அனைத்தையும் எவ்வித பயனும் கருதாமல் விளையாட்டாகச் செய்பவனே