பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

416 38 இராமன் - பன்முக நோக்கில் கூட்டத்தை மானுடம் வென்றது . இது சுக்கிரீவன் எண்ணம். இந்த இராம இலக்குவர்கள் தேவர்க்கெல்லாம் தேவர்களே ஆவர்; அந்தப் பரம் பொருளே மாறி இந்த மனிதர்களாக வந்துள்ளது . இதுவும் சுக்கிரீவன் நினைவு - தெளிந்நிலையில் அவன் கொண்ட நினைவு: தேறினன் - அமரர்க்கு எல்லாம் தேவர் ஆம் தேவர் அன்றே மாறி, இப்பிறப்பில் வந்தார் மானிடர் ஆகி மன்னோ, ஆறு கொள் சடிரத்தானும், அயனும் என்று இவர்கள் ஆதி வேறு உள குழுவை எல்லாம் மானுடம் வென்றது. அன்றே. - கம்ப. 3804 இந்தத் தெளிவும் அனுமன் தந்த விளக்கத்தின் பின்னே விளைந்து , எவ்வாறாயினும் இராமனை அமரர்க்கெல்லாம் தேவராம் தேவர் என்று சுக்கிரீவன் போற்றினான் என்பது தெளிவு. வாலி இனி சுக்கிரீவன் தமையனும் மாபெரும் அறிவாளியும் தவபலம் உடையவனுமான வாலி முதலில் இராமனைப் பலவாறு ஏசுகிறான். ஆயினும், மெய்யறிவு விளங்கியநிலையில் எதிரே நிற்பவன் தசரதராமனாகவோ சுக்கிரீவனின் நண் வனாகவோ தெரியவில்லை, முரண் பட்ட இரட்டைகளைக் கடந்த முழு முதல்வன் இராகவன் என்ற கருத்தில் பின்வருமாறு பேசுகிறான். மூவர் நீ முதல்வன் நீ! முற்றும் நீ! மற்றும் நீ! பாவம் நீ தருமம் நீ! பகையும் நீ! உறவும் நீ! கம்ப 4063 "யாவரும் எவையும் ஆய் இருதுவும் பயனும் ஆய், பூவும் நல் வெறியும் ஒத்து ஒருவ அரும் பொதுமையாய் ஆவ நீ ஆவது என்று அறிவினர் அருளினார்