பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4í8 38 இராமன் - பன்முக நோக்கில் ஏனையோர் பிறவி கருமத்தின் பயனாய் விளைவது. கருமங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் எடுக்கும் அவதாரப் பிறவி விளையாட்டாகச் செய்வதாகும்). 'எல்லா உயிர்களையும், நான் முகன் உள்பட அனைத்துயிர்கட்கும் முன்னர்த் தோன்றியவன் நீ ஆதலால், நீயே அனைத்திற்கும் தந்தை எனப்படுவாய், தரும சொரூபியே! நீ தந்தை என்றால், தாய் என்பார் யார்? (2563) தோற்றம், முடிவில்லாத நின்னோடு யார் தோன்றி இருக்க முடியும்? எனவே தந்தையும் தாயும் தர்மசொரூபியான நீதான். (அம்மை நீ, அப்பன் நீ என்றும், ஈன்றாருமாய் எனக்கு எந்தையுமாய் என்றும் அப்பர் பாடியருளிய தேவாரம் ஒப்புநோக்கத்தக்கது) "நீயே ஆதியான பரம்பொருள். எனவே, இவ்வுலகங்கள் அனைத்தும் உன்னுடையவே ஆகும். ஆராய்ந்து உண்மை காணாத சமயங்கள் கூட இறுதியில் உன்னையே அடைகின்றன. அதுவன்றி வேறு கதி இல்லை. அப்படியிருக்க, வஞ்சனை செய்தவர்போல் ஏன் நீ படைத்த உயிர்களின் எதிரே வெளிப்படாமல் ஒளித்துக்கொள்ள வேண்டும் நீ வெளிப்பட்டு நின்றால், அதனால் என்ன தீங்கு நேரும்: உயிர்களுக்குப் பிடிபடாத இந்த மாயை ஆகிய விளையாட்டில் நீ ஈடுபடவும் வேண்டுமோ? (2569) "தாய்ப்பசு அறியாத கன்று இவ்வுலகில் இல்லை. அக்கன்று கூட எத்தனை பசுக்கள் இருப்பினும், தாய்ப்பசுவை நன்கு அறிந்து கொள்ளும். அனைத்தையும் ஈன்ற தாயாகிய நீ எல்லாவற்றையும் அறிந்துள்ளாய். ஆனால் ஒரே தாயாகிய உன்னை, அவ்வுயிர்கள் ஏனோ அறியவில்லை. இது என்ன மாயை ? வாராதே வரவல்லவனே! (2570) (வாராதே வரவல்லவன் என்பதன் விளக்கம் பின்னர் விரிவாகக் கூறப்பட்டுள்ளது) கந்தர்வனாகி நின்றும், எதிரே இருப்பவன் இராமன் வடிவில் உள்ள மூலப்பொருள் என்று தெரிந்து கொண்ட விராதன், அந்த மூலப்பொருள் செய்யும் செயல்களின்