பரம்பொருளும் இராமனும் 38 419 அடிப்படையைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்கிறான். விராதன் மட்டும் அல்லாமல் ஏனைய உயிர்களின் நிலையும் இதுதான். - இந்திரன் சரபங்கன் ஆசிரமத்தில் அவனைச் சந்திக்கச் சென்ற இராமன், ஆசிரமத்தினுள் யாரோ பேசிக் கொண்டிருப்பதை அறிந்து, இடையே புகுதல் சரியன்று என்று வாயிலிலேயே நின்றுவிட்டான். உள்ளேயிருந்து வெளியே வந்த இந்திரன் தசரத ராமன் உருவில் மூலஇராமன் இருப்பதை அறிந்து பேசத் தொடங்குகிறான். விராதன் வெறுங்கந்தர்வன்; இந்திரன் அமரர் தலைவன். ஆதலால் அவன் பேசியதை விடப் பல படிகள் மேலே சென்று இந்திரன் பேசுவது அவன் தகுதிக்குரிய பேச்சாகும். "...06:36, 26 பெப்ரவரி 2016 (UTC)~ இமையோர் இறை - காசினியின் கண்தான், அரு நான் மறையின் கனியை கண்டான். (2610) . "எல்லாப் பொருள்களிலும் கலந்தும் தனித்தும் நிற்கின்ற ஒளிப் பிழம்பே! எல்லாப் பற்றுகளையும் நீக்கிய ஞானிகளுக்குத் துணைவனே! பிறவித் துன்பம் உள்பட, எ ல் லாத் துன் பக் கடலையும் நீந்துவதற்கு புணையானவனே! எங்கள் துயரத்தைப் போக்க வேண்டுமென்று வேண்டி நின்றபொழுது கருணை கூர்ந்து இரங்கி வந்தவனே! நின் இணையடித் தாமரைகள் இந்தப் பூமியின் மேல் படத்தக்கனவோ?" (2513). "ஆதியில் ஏகம் சத் என்று சொல்லப்படும் மூலப் பரம்பொருள் ஒன்றாகவே இருந்து, பிறகு தன்னிடத்தில் இருந்து பல உலகங்களையும் உயிர்களையும் படைத்து
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/440
Appearance