பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/449

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

428 38 இராமன் - பன்முக நோக்கில் உண்மையோ பொய்யோ என்ற ஐயம் தோன்றிவிடுகிறது. ஒருவேளை தன் மன மயக்கத்தால்தான் அமைதிபோன்ற ஒரு நிலை ஏற்பட்டதோ என்ற ஐயம் தோன்றுகிறது. இந்நிலையில் இந்த அமைதி கிடைத்த காரணம், இறைவன் தன் மனத்துள் வந்து தங்கியமையால் அன்றோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது. அப்படியானால், இப்பொழுது அமைதி இழந்த நிலையின் காரணம் யாது? தன்னுள் வந்த பொருள் போய்விட்டதோ? வாராதே வந்த பொருள் மீட்டும் போகாததுபோலப் போக்குக் காட்டிப் போய்விட்டதோ என்னும் ஐயம் வலுப்பெறுகிறது. இந்த ஐயதிலையில் நின்று நம்மாழ்வார் இதோ பாடுகிறார்: “மாலாய் மயக்கி அடியேன்பால் வந்தாய் போலே வாராயே வந்தாய் போலே வாராதாய் - (திருவாய்மொழி 6:10:8.9) கவிச்சக்கரவர்த்தி கம்பநாடான் வாராதே வர வல்லாய்' என்று பாடியதும், நம்மாழ்வார் வந்தாய் போலே வாராதாய்' என்று பாடியதும் முரண்பாட்டில் சிக்கியுள்ள நம் போன்றவர்கள் மனநிலையை எடுத்துக்காட்டுவதேயாகும். 'வாராமலே வருதலும், வந்தது போல வாராம லிருத்தலும் முரணில் சிக்கி அவதியுறுபவர் காணும் நிலையாகும். முரணற்ற நிலையைச் சிந்திப்பவர்கள் இதில் மயங்குவதில்லை. எனவே, அனுபவ நிலையிலிருந்து கவிஞன் பாடுவதில் முரண்பாடின்மையை அறிய வேண்டும். அவ்வாறாயின், சொற்களில் முரண்பாடு தோன்றும்படி இக் கவிஞர்கள் ஏன் பாடவேண்டும் என்ற ஐயம் தோன்றும்? அது சொல்லின் குறைபாடும் பேசுபவனின் குறைபாடுமேயாம். இரயிலில் செல்லும் இருவருள் ஒருவர் கோவை வந்துவிட்டதா? என்று கேட்கிறார். இதைக் கேட்பவர் ஒருவரும் சிரிப்பதில்லை. கோவையாவது, வருவதாவது? அதற்கு என்ன கால்களா முளைத்து விட்டன : என்று கேட்பதுமில்லை. ஏன் ? கோவை வந்துவிட்டதா? என்று கேட்பவர் மனத்தில் இருக்கும் பொருள் கோவைக்கு நாம் வந்துவிட்டோமா? என்பதே; அதையே கேட்பவரும் தெரிந்துகொள்கிறார். எனவே, சிரிப்பதற்கு ஒன்றுமில்லை. ஆனால், நேரே சொற்பொருள் காண்பதாயின்