பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பனும் பல்வேறு இராமாயணங்களும் ேே 27 கொள்கையை வகுத்துள்ளான். மும்மூர்த்திகளுள் ஒருவராகிய விஷ்ணுவே இராமனாகப் பிறந்தான் என்று கூறக் கம்பன் உடன்படவில்லை. இராமபிரானைப் பொறுத்தமட்டில் வான்மீகி முதல் எந்த இராமாயணமும் நினையாத, சொல்லாத ஒரு கருத்தைத் தொடக்கத்திலிருந்தே இலைமறைகாயாக வைத்துள்ளான் கம்பன் என்பது நுனித்து நோக்குவார்க்குப் புலனாகாமல் போகாது. வான்மீகம் - பாலகாண்டம் பற்றி இதுபற்றி மேலும் சிந்திப்பதற்கு முன் வான்மீகியின் பாலகாண்டம் பற்றியும் அதில் கூறப்பட்டுள்ள செய்தி பற்றியும் சிந்திக்க வேண்டும். இங்கு நாம் பாலகாண்டம் என்று குறிப்பிட்டு மேற்கோளாக எடுத்துக்காட்டும் எல்லாப் பாடல்களும் தென் பிராந்தியத்தில் வழங்கும் வான்மீகி இராமாயணமே ஆகும். வான்மீகி இராமாயணம் என்ற பெயரில் தென் பிராந்தியம், வட பிராந்தியம், கீழ்ப் பிராந்தியம் என்ற மூன்று வகையான இராமாயணங்கள் உள்ளன. இவை ஒன்றுக்கொன்று மாறுபட்டுள்ளன என்பது ஆய்வாளர் கண்ட முடிவாகும். இத்தகைய முரண்பாட்டுக்கு ஒரு காரணம் உண்டு. இந்தியா முழுவதும் பரவியிருந்த இராமகாதைக்கு முதன்முதலாக வடிவு கொடுத்தவன் வான்மீகி என்பதில் ஐயமில்லை. வான்மீகியின் அந்தக் காப்பிய வடிவை ஏற்றுக் கொண்டாலும் அந்தந்தப் பிராந்தியத்தாருடைய பண்பாடு, ஒழுகலாறு, கருதுகோள்கள் என்பவை அந்தந்தப் பகுதியில் வழங்கும் வான்மீகியிலும் ஏற்றப் பெற்றன. ஏற்றியவர்கள் தத்தம் பண்பாட்டிற்கு ஏற்பக் கதையில் சிறிது மாறுபாடுகள் செய்து அவற்றைப் பாடல்களாகப் பாடி மூலநூலில் தக்க இடத்தில் சேர்த்துவிட்டனர். இப்படித்தான் நடைபெற்றிருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்த ஒர் எடுத்துக்காட்டைக் காணலாம். தென் பிராந்தியப் பகுதியில் வாழும் தர்மசாலாப் பதிப்பு என்று கூறப்படும் வான்மீகத்தில் பாலகாண்டத்தில் 18ஆவத சருக்கத்தில் பேசப்படும் இராமாவதாரம் ஆழ்ந்து நோக்கற்குரியது. சகோதரர்கள் பிறந்த நட்சத்திரம், லக்கினம்