பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

430 38 இராமன் - பன்முக நோக்கில் பரம்பொருள் என்பதை வலியுறுத்தவே ஆகும். தசரதராமன் என்ற வடிவினுள் மூலஇராமன் காட்சி அளிப்பதை எல்லோரும் கண்டு கொள்ள முடியாது என்பது உண்மைதான். விராதன், கவந்தன், வாலி என்ற மூவரும் தொடக்கத்தில் இராமனை இன்னான் என்று அறியாமலிருந்து அவன் அம்புபட்டு இறக்கும் தறுவாயில் தான் மூலஇராமனைத் தரிசிக்கின்றனர். சாபத்தால் அரக்கர்களாக இருந்த விராதனும், கவந்தனும் இறந்தவுடனேயே எப்படி மூல இராமனைத் தரிசிக்க முடிந்தது? விடை மிக எளிதானதுதான். இவர்கள் இருவரும் வாலியும், இராகவனுடைய ஏவுகூர்வாளியால் தீட்சை பெற்றனர். ஆதலின் ஆவிபோம் வேளைவாய் மெய்யுணர்வு பெற்றனர். அத்தகைய ஒரு நிலையில்தான் கவந்தன் இதோ பேசுகிறான்: "கண்ணுக்குப் புலனாகித் தோன்றி என் சாபத் துயர் துடைத்தவனே! எல்லாப் பொருளையும் ஈன்றவன் நீதானோ? அறக்கடவுளின் சான்றாக உள்ளவன் நீ தானோ? தேவர்கள் தங்கள் துயர் தீர்க்கச் செய்த தவத்தின் பயனாக வந்தவன் நீயோ மும்மூர்த்திகள் என்று மூன்று கவடாக வெளிப்பட்டுத் தோன்றிய மூலப்பரம்பொருள் நீ தானோ? (8682) "தொடக்கம் என்ற ஒன்றில்லாத பரம்பொருளே! நீ இந்த மானுட வடிவில் வந்துள்ளதன் காரணத்தை யார் அறிவார்?" (8683) “காண்பார், காணப்படுபொருள் என்பவற்றினிடையே உள்ள கண்ணாகி நிற்பவனே! எல்லாப் பொருளினும் சார்ந்துள்ளவன் போல் காணப்படினும், உண்மையில் எந்த ஒன்றினும் சாராது தனித்து நிற்பவனே! உன்னை ஆண் என்று சொல்வதா? பெண் என்று சொல்வதா? இவை இரண்டிற்கும் அப்பாற்பட்ட ஒன்று என்று சொல்வதா? (3684) ‘ஐயனே ! உன் செயல்களைக் கண்டு அவைதாம் அறநெறி என்று வேதங்கள் கூறினவா? அல்லது வேதம் கூறின