பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/459

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

438 38 இராமன் - பன்முக நோக்கில் கூறியவுடன் ஆயிரம் மறைப் பொருள் உணர்ந்து அறிவு அமைந்தவனாகிய இராவணனுக்கு அறிவுபூர்வமாகவும், தர்க்கரீதியிலும் பரம்பொருளின் இலக்கணத்தை ஒரு பாடலில் விளக்கிக் கூறிவிட்டு, அவனே இராமனாக வந்தவன் என்று கூறி முடிக்கிறான் அனுமன். இதனை அடுத்து ஓரளவு ஆராயப் பெறும் அவ்விளக்கம் இராமனே பரம்பொருள் என்பதை ஐயம் திரிபு இன்றி விளக்குகின்றது. ஆதலின் அதுவே இக்கட்டுரைக்கும், இராமன் பன்முக நோக்கில்' என்ற இந்த நூலுக்கும் முடிவுரையாகும். முடிப்பதற்குமுன் தசரத ராமன், மூல ராமன் என்ற இருவரிடை உள்ள இயல்பையும் பரம்பொருள் பற்றிய கவிஞனின் கருத்தையும் விளக்கும் ஒர் ஒப்பற்ற பரமனின் விளக்கத்தைக் காண்பது நலம். இராமனைப் பரம்பொருள் எனக் கண்டு அனுபவித்த சிறிய திருவடியின் கூற்றுக்கு கவிச்சக்கரவர்த்தி அந்தப் பாடலை அமைக்கிறான். பரம்பொருளுக்கு எத்தனையோ பெயர்கள் இருந்தும், கவிஞன் காரணன்' என்ற பெயரை மட்டும் குறிப்பாக அனுமன் பயன்படுத்துகிறான். முதற்காரணனாய் அமைந்ததை முன்னர்க் கூறினான். அனைத்துக் கலையையும் சிக்கறத் தெளிந்ததுடன் அல்லாமல், தன் புலனடக்கத்தால் ஏனையோர் யாரும் எய்த முடியாத உயர்ந்த நிலையை அடைந்த அனுமன் இதோ பேசுகிறான்; மூலமும் நடுவும் ஈறும் இல்லது ஒர் மும்மைத்துஆய காலமும், கணக்கும், நீத்த காரணன், கைவில்ஏந்தி சூலமும், திகிரி சங்கும், கரகமும் துறந்து, தொல்லை ஆலமும், மலரும் வெள்ளிப் பொருப்பும் விட்டு, அயோத்தி வந்தான். - கம்ப. 5884 எந்த ஒன்றுக்கும் ஒரு தோற்றமும், ஒர் இருப்பும், ஒரு மறைவும் உண்டு. யுகாந்த காலமாக உள்ளது என்று நாம் கூறும் இந்தச் சூரிய மண்டலமும், இச் சூரிய மண்டலம்