பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியன் முன்னுரை 45 ஆண்டுகட்கு முன்னர் இலங்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சி என்னைப் பிடர் பிடித்து உந்திற்று. பத்துநாள் தொடர் சொற்பொழிவிற்காக யாழ்பாணத்தை அடுத்த கரணவாய் என்ற இடத்திற்குச் சென்றிருந்தேன். முதல் நாள் சொற்பொழிவு முடிந்து, உறங்கி எழுந்தபின் ஒர் அதிர்ச்சி தரும் நிகழ்ச்சி என்னுள் விளைந்திருந்தது. வாயைத் திறந்து பேசமுயன்றால் வெறும் காற்றுத்தான் வெளிவந்தது. குரல்வளையில் உள்ள இரண்டு சவ்வுகள் செயலிழந்துவிட்டன. மருத்துவர்கள் இதனை பெராலிஸிஸ் (Paralysis of the vocal chords) argårgy offs ill-L-GTss. Goff,65 மருத்துவம் இன்றுவரை இல்லை. வேறுவழியே இல்லாத நிலையில் என்னைப் பரிசோதித்த மருத்துவ நண்பர், அப்பொழுது அங்கு வாழ்ந்த யோகசுவாமிகள் என்ற சித்தமகாபுருஷரைச் சென்று காண அறிவுரை கூறினார்கள். முன்னரே எனக்கு சுவாமிகளிடம் பழக்கம் உண்டு. ஆதலால் அவர்களைச் சென்று வணங்கி வாய் திறந்து பேச முடியாத நிலையில் நிற்கையில் அவர்கள் பலவற்றைக் கூறினார்கள். பேச்சு ஒன்றைமட்டும் வைத்துக்கொண்டு வயிறு வளர்க்கும் நான் அதை இழந்த நிலையில் அவர்கள் பேசியதை என் மனத்திடை வாங்கிக் கொள்ளவே இல்லை. திடீரென்று சுவாமிகள் கூறியதை அவர்கள் மொழியிலேயே இங்கு நினைவுகூர்கிறேன். 'அடேய் பொடியன்! சேக்கிழாரையும் கம்பரையும் நாங்கள் தானே வெட்டிப் புதைக்கணும். போய் இன்று மாலை பேசிவிட்டு இங்காலே வா’ என்று தமக்கே உரிய இலங்கை தமிழில் ஆசி வழங்கினார்கள். மீட்டும் எனக்குப் பேச்சு வந்ததும் மருத்துவர்கள் வியப்புற்றதும் தனிக்கதை, பல்லாண்டுகள்