பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பனின் காப்பிய நோக்கம் ே 33 இருக்கும்பொழுது, மறுபடியும் இறைவன் திறமையை ஒரு காப்பியமாகப் பாடுவது தேவையா என்ற வினா கம்பன் மனத்தில் நீண்ட காலம் எழுந்திருக்க வேண்டும். இந்த அமைப்பு வேண்டாமென்றால் வான்மீகியைப் பின் பற்றி மனிதருள் சிறந்த ஒருவனைப் பாட எடுத்துக்கொள்வதாக வைத்துக்கொண்டு காப்பியம் இயற்றலாம். அப்படியானால், ஏனைய சிலப்பதிகாரம், மணிமேகலை, உதயணன் கதை போன்ற மக்களுள் சிறந்தவனைப் போற்றும் மற்றொரு காப்பியமாக அமையுமே தவிர, தனக்கென ஒரு தனித்தன்மையை ஏற்படுத்திக்கொண்ட காப்பியமாக அமையாது. உலக இலக்கியங்களில் தெய்வங்களைப் பாடிய காப்பியங்களும் உண்டு; மனிதர்களைப் பற்றிப் பாடிய காப்பியங்களும் உண்டு. இந்த இரண்டையும் ஒரே மனிதனிடத்தில் அமைத்துப் பாடிய காப்பியம் வேறு எங்கும் இல்லை. மாபெரும் கவிஞனான கம்பன் இந்தப் புது முயற்சியில் ஈடுபடுகிறான். அவனுக்கு முன்னும் பின்னும் யாரும் செய்ய இயலாத இந்தப் புது முயற்சியில் முழுவெற்றி கண்ட பெருமை கம்பன் ஒருவனுக்கே உண்டு. - இருமைக் காட்சி: வான்மீகியில் மனித இராமனையும், ஆழ்வார்களின் தெய்வ இராமனையும் ஒன்றாக இணைப்பது என்பதே ஒரு மாபெரும் சாதனைச் செயலாகும். இந்த இணைப்பில் அவன் கையாண்ட புதுமை அறிந்து மகிழ்வதற்குரியதாகும். காப்பியத்தில் வரும் சரபங்கள், இந்திரன், கருடன், விராதன், வீடணன் போன்ற பாத்திரங்கள் இராமனை தெய்வம் என்று அறிந்து போற்றுகின்றன. அவர்கள் போற்றும் பொழுதுகூட இராமன் தன்னைப் பரம்பொருள் என்று நினைத்ததாகவோ, அறிந்து கொண்டு செயல்பட்டதாகவோ கம்பன் காட்டவே இல்லை. கம்பன் கண்ட இராமன் தொடக்கத்திலிருந்து இறுதிவரை மனிதனாகவே நடந்து 3 يلي