பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்களும் இராமனும்ே 37 அப்பெருமகனுடைய எளிவந்த தன்மையை அறிய முடிகின்றது. அன்றியும், எதிரே வருபவர்களை நிறுத்திப் பேசுகிறான் என்றால், அரச குமாரன் தேரில் செல்லாமல் நடந்தே செல்கிறான் என்ற கருத்தையும் பெறவைத்துவிட்டான், கம்பன். தசரத குமாரனின் செளலப்பியத்திற்கு இந்நிகழ்ச்சி எடுத்துக்காட்டாக அமைகின்றது. இங்ங்னம் பேசியவன் யார் என்று நினை(ப்பிக்கின்றான் கவிஞன். இறைவன் ஒருவனுக்குத்தான் இந்த எளிவந்த தன்மை இலக்கணமாக அமையும். இறைவனுக்கே உரிய இந்த எளிவந்த தன்மையை அரசகுமாரனாய்ப் பிறந்தும் அடுத்து ஆட்சிப் பொறுப்பை ஏற்கப்போகின்றவனாய் இருந்தும் - அதிகார எண்ணமோ, தான் உயர்ந்தவன் என்ற எண்ணமோ ஒரு சிறிதும் இன்றி, எதிரே வருபவர்கள் அத்துணைப் பேரையும் நிறுத்தி விசாரிக்கின்றான். அரசகுமாரனாகிய அவனுடைய பண்பாட்டில் தன்னை மறக்கிறான் கவிஞன். அந்த நிகழ்ச்சியைக் கூற வரும்பொழுது இப்படி விசாரித்தவன் அரசகுமாரன். ஆதலால் இளவரசன் என்றோ, தசரதமைந்தன் என்றோ, இராமன் என்றோ, மூத்தவன் என்றோ குறிப்பிட்டிருக்கலாம். இவை ஒன்றையும் பயன்படுத்தாமல் "எமை உடை இறைவன்" என்ற தொடரால் இராமனைக் குறிப்பிடுகின்றான். பாத்திரங்கள் கூற்றாக இல்லாமல், கவிஞன் தன் கூற்றாக இராமனைக் குறிப்பிடும் இடங்களில் இது இரண்டாவதாகும். திரு அவதாரப் படலத்தில் இறுதிப்பாட்டில் கவிஞன் தன் கூற்றாக இராமனைக் குறிக்கும்பொழுது "முப்பரம் பொருளுக்குமுதல்வன்" என்று கூறுவது முதல் முறையாகும். "எமை உடை இறைவன்” என்ற தொடருக்கு எல்லா உயிர்களையும் (எமை இயல்பாகவே தன் உடைமையாகப் பெற்றுள்ள தலைவன் இறைவன்) என்பதே பொருளாகும். இந்த ஒரு பாடலில், பூமியில் நடந்து வரும் இராகவன், மூலப்பரம்பொருளே என்பதையும் அண்டங்களில் உள்ள