பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்களும் இராமனும்38 41 மக்கள் இவர்களைப் பார்க்கின்றனர். அந்த நிலையில் அம் மக்களுடைய செயலைக் கூறவந்த கவிஞன், பின்வரும் பாடலைப் பாடுகின்றான். தோள்கண்டார், தோளேகண்டார், தொடுகழல் கமலம் அன்ன தாள்கண்டார், தாளே கண்டார். தடக்கை கண்டாரும், அஃதே வாள்கொண்ட கண்ணார்யாரே வடிவினை முடியக் கண்டார்? ஊழ்கொண்ட சமயத்து அன்னான் உருவு கண்டாரை ஒத்தார். - கம்ப. 1081 வருபவர்களோ நால்வர். தெருவில் நின்று பார்க்கின்ற மகளிரின் கண்களில் இராமன் ஒருவன்மட்டுமே கண்ணில் தெரிகிறான். அப்படிக் கூறுவதுகூடத் தவறு என்கிறான் கவிஞன். இராமன் என்ற முழுவடிவையும் யாரும் காண வில்லை. சனகனுடைய நாட்டில் உள்ள அப் பெண்கள் இதுவரை எத்தனையோ வீரருடைய தோள்கள், தாள்கள், கைகள் ஆகியவற்றைப் பார்த்திருப்பார்கள். இந்த உறுப்புகள் அனைத்தும் சேர்ந்துதான் ஒரு வீரனுடைய முழுவடிவாகும். ஒருவனுடைய கையைமட்டும் கண்டோ, மார்பைமட்டும் கண்டோ யாரும் வியந்துவிடுவதில்லை. மலைபோன்ற தோள்களாக இருப்பினும், யானையின் துதிக்கை போன்ற கைகளாக இருப்பினும், அவற்றைத் தனியே யாரும் பார்ப்ப தில்லை. இந்த உறுப்புகளை உடைய வீரர்களை கேசாதிபாதம் கண்டு, மகிழ்ந்து வியக்கும் பழக்கம் மிதிலை மக்களுக்கு உண்டு. வாலாயமாக வீரர்களின் முழுவடிவையும் கண்டு பழகிய மிதிலைப் பெண்களுக்கு ஒரு புதிய அனுபவம். வீரர்களுடைய உறுப்புகளைக் கண்டு ரசிப்பதற்கு அந்த