பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழித்துத்தான் சேக்கிழாரையும், கம்பரையும் சுவாமிகள் குறிப்பிட்டதை நினைக்க வேண்டி வந்தது. இது வரை நான் எழுதியுள்ள நூல்களில் முக்கால் பகுதிக்கு மேற்பட்டவை சேக்கிழாரையும், கம்பரையும் பற்றித்தான். பல்லாண்டுகட்கு முன்பே தொல்காப்பியம் மெய்ப்பாட்டியலுக்குப் புதிய உரை ஒன்று எழுத முயன்றும் இன்னும் நடைபெறவில்லை. இந்த நிலையில் கம்பன் புதிய பார்வை என்ற நூலையும் பெரிய புராணம் ஓர் ஆய்வு என்ற நூலையும் சென்ற சில ஆண்டுகளில் எழுதி முடித்த பின் மகான் திரு. யோகசுவாமியின் கட்டளையை நிறைவேற்றி விட்டதாக நினைத்திருந்தேன். எத்தனை முறை கோவை சென்றாலும் புறப்படும் நாளில் திரு. R. துரைசாமி நாயுடு அவர்கள் இல்லத்தில் விருந்துண்டு, உரையாடிவிட்டு வருவது வழக்கம். ஒரு முறை அவருடன் உரையாடிக் கொண்டிருக்கும் பொழுது அப்பெரியார் திடீரென்று என் கைகளைப் பற்றிக் கொண்டு இராமனைப் பற்றி முழுமையாக ஒரு நூலை எழுதித் தரவேண்டும் என்றார்கள். இதனைக் கூறியவர் தானகுர கர்ணனும், பரமபாகவதருமாகிய திரு. துரைசாமி நாயுடு அவர்கள். அவர்களுடைய கட்டளை என்னுடைய நண்பர் நாயுடு அவர்களின் கட்டளையாக இல்லை. அந்தப் பரமபாகவதர் மூலமாக இராமனே அந்தக் கட்டளையை இட்டான் என்ற எண்ணம் ஒரு விநாடி மனத்தில் தோன்றி மறைந்தது. பாகவதரின் கட்டளை, பரமனின் கட்டளையே ஆகுமன்றோ? அதன் பயனாகவே கண்ணில்லாத இந்நிலையில் இச்சிறு நூலை எழுதி முடித்தேன். கண் பார்வை இல்லாத நிலையில் இந்த நூலை எழுதுவதற்கு உதவி புரிந்த என் மகள் ஞா.மீராவின் உதவி மிகவும் போற்றப்பாலது. அவளுக்கு இறைவன் அருள்