பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்களும் இராமனும்ேே 43 என்று கூறுவர். இதற்குள்ள ஒரு தனிச் சிறப்பைக் காண வேண்டும். இந்த எண்ணிலி தனியே இருந்தாலும் எண்ணிலிதான், இதனோடு ஒன்றைக் கூட்டினாலும் graúróðflagg.srair. (Infinity+infinity= Infinity; Infinity - Infinity = Infinity) அதுபோல இராகவனின் உறுப்புகள் (தோள், தாள், கை முதலியன) ஒவ்வொன்றும் மூலப் பரம்பொருளின் ஒரு கூறே ஆகும். அதாவது, எண்ணிலிக்குள்ள மதிப்பைப் பெற்ற தாகும். எனவே, இந்த உறுப்புகள் எல்லாம் சேர்ந்த இராமன் என்ற வடிவமும் அதே எண்ணிலிதான். ஆதலால் தனித்தனி யாக ஒவ்வோர் உறுப்பையும் கண்டவர் பிற உறுப்புகளோடும் அவ் உறுப்புகளைத் தாங்கிய இராமனோடும் ஒப்பவைத்துத் தான் அவன் அழகை அல்லது சிறப்பை அறிய வேண்டுமென்ற இன்றியமையாமை இல்லை. ஒவ்வோர் உறுப்பிலும் மூலப் பரம்பொருளின் முழுத்தன்மையை அவர்களால் காண முடிந்தது. ஆதலால் அதனைத் தாண்டிச் சென்று அடுத்த உறுப்பைக் காணும் தேவை அவர்களுக்கு இல்லாமல் போய் விட்டது. வாள் கொண்ட கண்ணார் யாரே, வடிவினை முடியக் கண்டார் என்று கவிஞன் கூறும்பொழுது, இரண்டு கருத்துகளை உள்ளடக்கிப் பேசுகிறான். இரண்டு கண்கள் பெற்ற எவரும், வாள் போன்ற அக் கண்கள் எவ்வளவு சிறப்புடையனவாக இருந்தாலும் இராமன் வடிவு முழுவதை யும் ஒருசேரக் கண்டு அனுபவிக்க முடியாமல் இருந்துவிட்டன என்பது ஒரு பொருள். அடுத்து, பரம்பொருளின் அழகை ஊனக் கண்களால்மட்டும் கண்டு அளந்து, அறிந்து அனுபவிக்க முடியாது என்பது மற்றொரு பொருள். இதனை 'யாரே வடிவினை முடியக் கண்டார் என்ற தொடரால் விளக்குகிறார். வேறுபடும் பலரும் ஒன்றில் போற்றுவர் இராமனைப் பற்றிச் சாதாரணக் குடிமக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை முன்னர்க் கண்டோம். இனி, அறிவின் மிகுந்த மேல்மக்கள் அரசுப் பணிகளில் ஈடுபட்ட