பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்களும் இராமனும்ேே 45 குறிப்பிடுகிறான். மனிதரினும் வேறுபட்டவர் வானவர்கள்; வேதியரினும் மாறுபட்டோர் மற்றுளோர்; கற்றவரினும் மாறுபட்டவர் கற்றிலாதவர். இத் தொகுப்பினுள் ஒருவர் சிறந்தது என்று கூறுகின்றவற்றை மற்றவர் ஏற்றுக்கொள்வது கடினம். கற்றிலாதவர் விரும்புவதை, உயர்ந்தது என்று சொல்வதைக் கற்றவர் ஏற்பது கடினம். மற்றத் தொகுப்பும் இவ்வாறே ஆகும். முரண்பட்ட கொள்கையுடைய இத் தொகுப்பாளர் அனைவரும் ஒருசேர மனம் ஒப்பிச் சிறந்தது அல்லது சிறந்தவன் என்று ஏற்றுக்கொள்வது இராமன் ஒருவனைத்தான். இவ்வாறு கூறுவது விந்தையானதுதான். எந்தவொரு மனிதனையோ, கருத்தையோ, பொருளையோ மாறுபட்ட கருத்துடைய அனைவரும் ஏற்றுக்கொள்கின் றார்கள் என்றால், அந்தப் பொருள் கடவுளாகத்தான் இருக்கும். இங்கு இராமனை வானவர் முதல் நரகர் ஈறாக மக்களில் அனைத்துத் தரத்தாரும் உண்ணும் நீரினும், உயிரினும் அவனையே உவப்பார் என்று கூறுவதால், இராமன் பரம்பொருளே என்ற கருத்தை மறைமுகமாக வசிட்டன் எடுத்துக் கூறுகிறான். நம்மாழ்வாரின் உண்ணும் சோறும், பருகு நீரும் என்ற பாடலையும் (நாலாயிரம் 3517 மனத்துட் கொண்டு கம்பன் பாடியதாகும் இத்தொடர். உயிரினும் சிறந்தவன் இறைவன் ஒருவனே என்: தை, 'என்னில் ஆரும் எனக்கு இனியார் இலை என்னிலும் இனியான் ஒருவன் உளன் என்னுளே உயிர்ப்பாய் புறம்போந்து புக்கு என்னுளே நிற்கும் இன்னம்பர் ஈசனே. (தேவாரம் 5-21-) என்ற பாடலில் திருநாவுக்கரசர் கூறியிருப்பதைக் காணலாம். மேலும், உடல்மிசை உயிர் எனக் கரந்து, எங்கும் பரந்துளன் (நாலாயிரம் . 2905)