பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 38 இராமன் - பன்முக நோக்கில் இங்கு நிகழ்ந்தது ஒன்றையும் அறியாத இராகவன், தேரில் பவனி வருகிறான். மக்கள் கூட்டம் அவனைக் கண்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆரவாரிக்கின்றது. இராமன் வருகையைக் கண்ட மக்கள் வெள்ளம் என்ன நினைத்தது? இன் உயிர் யார்க்கும் ஒன்றாய்ப் பொருஅரு தேரில் சென்றது போல் அவனைக் கண்டார்கள். அதாவது, கண்ணுக்குப் புலப்படாத அவர்கள் அனைவரது உயிரும் கட்புலனாகும்படி இராமன் என்னும் வடிவுகொண்டு தேரில் செல்வது போல அவர்கள் உணர்ந்தார்களாம். முதிர்ந்தோர் காட்சி) இனி, தம்மை மறந்து மகிழ்ச்சியில் திளைத்த இளையோர் கூட்டம் ஒருபுறம் இருக்க, அறிவாலும் அனுபவத்தாலும் முதிர்ந்த பெரியோர்கள் இராமனை வாழ்த்துகிறார்கள் என்ற கருத்தில், 'உய்ந்தது இவ்உலகம்' என்பார்; ஊழி காண்கிற்பாய்' என்பார்; 'மைந்த! நீ கோடி எங்கள் வாழ்க்கை நாள் யாவும் Tាយណា 'ஐந்து அவித்து அரிதின் செய்த தவம் உனக்கு ஆக' எனயா; 'பைந்துழாய்த் தெரியலாய்க்கே நல்வினை பயக்க' என்பார்.' - - கம்ப. 1582 என்ற பாடலைப் பாடுகிறான் கவிஞன். உய்ந்தது இவ் உலகம் என்பது, மிகச் சிறந்த மனிதனாகிய நீ பட்டமேற்பதால் இவ்வுலகம் உய்கதி அடையும் என்றார் சிலர். உலகம் உய்வதற்குக் காரணமாகிய நீ ஊழிக்காலம் வரை வாழ்வாயாக என்றார் சிலர், எங்களுக்குள்ள வாழ்நாளையும் நீ பெற்று நீடு வாழ்வாயாக’ என்றார் சிலர், நாங்கள் ஐம்புலனையும் அடக்கி இதுவரை செய்த தவத்தின் பயன் நின்னை அணுகுவதாக என்றார் சிலர், துளசிமாலை அணிந்த உனக்கே நலன்கள் அனைத்தும் பெருகுவதாக என்றார் சிலர். தம்மால் விரும்பிப்