பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்களும் இராமனும்ேே 51 போற்றப்படும் ஒருவனுக்கு, தங்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்நாளையும் தருவதாகக் கூறியது தமிழக மரபாகும். “யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய" (புறம் 173 என்ற புறப்பாடல் இதற்குச் சான்றாகும். முதலடியில் இரண்டு கருத்துகள் உள்ளன. அதாவது, 'நீ பிறந்ததால் இவ்வுலகம் உய்ந்தது என்பது ஒன்று; நீ ஊழியையும் காண்பாய்' என்பது இன்னொன்று. இந்த இரண்டு வாழ்த்துகள் அவர்களையும் அறியாமல் அவன் பரம்பொருள் என்பதைச் சொல்லிக் காட்டுகின்ற முறையில் அமைந்திருப்பது கம்பன் கவித்திறத்திற்கு ஒர் எடுத்துக்காட்டாகும். - இராமன் வரவைக் கண்ட பலதிறப்பட்ட மக்களின் மனநிலையையும், தசரதன் புத்திரன்பால் அவர்கள் கொண்ட உறவையும், அவனுக்கு வரும் மகிழ்ச்சி தங்களுடையது என்று கருதும் மனப்பான்மையையும் இதுவரை எடுத்துக்காட்டி வந்த கவிஞன், இனி ஒரு தனிப்பட்ட கூட்டத்தாரைப் பற்றி ஒரு பாடலில் பேசுகிறான். இவர்களும் ஏனையோர்களை ப் போல மனித வடிவுடன் காணப்படுகிறவர்கள்தான். இவர்கள் ஏனையோரிடமிருந்து பிரித்துக் காண எந்த அறிகுறியும் இல்லை. ஆனால், இவர்களுடைய அறிவு வளர்ச்சி, அனுபவ வளர்ச்சி, ஆன்ம வளர்ச்சி என்பவை இவர்களுடைய பார்வையில் வெளிப்பட்டு ஏனையோர் காணும் அதே பொருளை இவர்கள் காண்கின்ற முறை வேறு என்பதனையும் பின்வரும் பாடல் தெரிவிக்கின்றது. தேரில் வரும் அரசகுமாரனை ஏனையோர் போலவே இவர்களும் கண்டனர். ஒரு சில வினாடிகளில் இவர்கள் பார்வை, பொன்னாலாகிய அந்தத் தேரைக் கடந்து அதனுள் அமர்ந்திருக்கின்ற அரசகுமாரனின் புறவடிவைக் கடந்து அதன் உள்ளே இலங்கும் ஆன்மாவின் பரிணாமத்தையே அளந்துவிடுகிறது என்கிறான் கவிஞன். ஒன்றை அளந்தால் அந்த அளவின் முடிவு என்பதை அறிய வேண்டுமல்லவா? இப்பெருமக்கள் கண்பார்வை என்ற அளவுகோலினாலேயே அரசகுமாரனை அளந்து, "ஓ! இவன் பெறும் அரசகுமாரன் அல்லன். இவனே மூலப்பரம்பொருள்