பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 38 இராமன் - பன்முக நோக்கில் ஆவான். யானை முதல் எறும்பு ஈறாய் எந்த உடம்பையும் எடுக்கும் பேராற்றல் படைத்த பரம்பொருள் இப்பொழுது தசரத புத்திரன் என்ற வடிவை எடுத்துள்ளது, என்ற பேருண்மையை இவர்கள் கண்டுவிட்டார்கள். இந்த மாமனிதர்களின் நிலை, வசிட்டன் நிலையோடு ஒப்பவைத்து எண்ணத் தகுந்ததாகும். ஆகவே, இராமன் யார் என்பது அயோத்தி நகரத்தில் வாழ்ந்த வசிட்டன் மட்டுமே அறிவான் என்று கூறுவது சரியன்று. அந்நகரில் ஊர் பேர் தெரியாமல் வாழ்ந்த கொண்டிருக்கும் ஒரு சில மாமனிதர்களுக்கும் இராமன் யார் என்பது தெரிந்திருந்தது என்பதையே பின்வரும் பாடல் விளக்குகிறது. "நீலமா முகில் ஆனான்-தன் நிறையினோடு அறிவும் நிற்க சிலம் ஆர்க்கு உண்டு? கெட்டேன்! தேவரின் அடங்குவானோ? காலமாக் கணிக்கும் நுண்மைக் கணக்கையும் கடந்து . நின்ற மூலம் ஆய், முடிவு இலாத மூர்த்தி இம் முன்பன் என்பார்". - கம்பன் 1585 இப்பாடலின் பொருள் வருமாறு: கரியபெரிய மேக்த்தைப் போன்ற இராமபிரானது, நிறையும் பேரறிவும் ஒருபுறம் இருக்க, அவனது நீர்மைக்குணம் வேறு எவருக்கும் இல்லை. இந்த முன்னவனாகிய இராமபிரான் தேவர்களுள் ஒருவனாய் இருப்பானோ? இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று அளவிடப்படுகின்ற மிக நுட்பமானதும், அளவுக் குறியீடுகளான எண்ணிக்கையையும் (எண்களையும்) கடந்து நிற்கும் இவன் மூலப்பரம்பொருளே ஆவான் என்றார் சிலர். இதனை அறிந்து கொள்ளாமல் இவ்வளவு காலத்தை வீணாகக் கழித்த விட்டோமே 'கெட்டேன்) என்பார் சிலர். இதற்கு முன்னுள்ள பாடலில், "வாரணம் அரற்ற வந்து, கிரா:ே மாற்றும் நேமி நாரணன் ஒக்கும் இந்த நம்பிதன்