பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்களும் இராமனும்ே 53 கருணை எனவரும் தொடர் நினையத்தக்கது. இராமபிரான் கருணை நாராயணன். கருணை போன்றது என்று உவமையளவில் நின்றது சில்ர் கணிப்பு. அப்பாடலில் கவிக் கூற்றாக ஆரணம் அறிதல் தேற்றா ஐயன் என இராமன் பரம்பொருளே என்ற முடிவும் தெரியக் கிடக்கிறது. அந்த இராமனைக் கண்டவர்கள் காரணமே இல்லாமல் கண்ணிர் விட்டுக் கசிந்தனர் என்றும் கவிஞன் கூறுகின்றான். இராமன் வெறும் இளவரசன் அல்லன், பக்தியோடு வழிபடத் தக்கவன் என்ற கணிப்பு இப்பாடலில் (1584) துலங்குகிறது. . . முன்கட்டுரையில் இராமன் பரம்பொருள் என்பதைக் கவிக் கூற்றாகச் சொல்லி வந்தோம். இப்போது முதன் முறையாக நகரப் பாத்திரங்கள் என்பவர்களுள் ஒருசில பாத்திரங்களின் கூற்றாக அக்கருத்தைப் பேச வைக்கிறான் கம்பன். அறிவு கடந்த உணர்வு நிலையில் முன்னர்க் கண்ட பாடலில் அறிவு விளக்கம் பெற்ற மாந்தர் சிலர் அந்த அறிவின் துணைகொண்டு அந்த இராமன் பற்றிய உண்மைச் சொரூபத்தை அறிந்தார்கள் என்று கூறிய கவிஞன், இனிவரும் பாடலில் அன்பு வழியாக அவனை இன்னார் என்று அறிந்ததைக் கூறுகிறான்: "மின்பொருவு தேரின் மிசைவிரன் வருபோழ்தில், தன்பொருவு இல்கன்று தனிதாவி வரல் கண்டாங்கு அன்புஉருகு சிந்தையொடும் ஆ உருகுமா போல், என்பு:உருகி, நெஞ்சு உருகி, யார் உருககில்லார்?" - - கம்பன் 1588 சென்ற பாடலில் அறிவு தொழிற்பட்டது. அதன்வழிச் சென்று அவன் யார் என்று அறிந்தார்கள். இப்பாடலில் சொல்லப்பட்டவர்கள் உணர்வு வழிச் சென்று அவன் யார் என்பதை உணர்கிறார்கள். அவனைக் கண்ட மாத்திரத்தில்