பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 38 இராமன் - பன்முக நோக்கில் சிறப்பான உத்தி காணப்பெறும். முன்னர் நடந்ததையோ, பின்னர் நடக்கப்போவதையோ அறியாமல், நடந்ததற்கு அல்லது நடைபெறப்போவதற்கு முரண்பட்ட ஒன்றை நாடகப் பாத்திரங்களோ அல்லது காப்பியப் பாத்திரங்களோ பேசினால் அந்த முரண்பட்ட பேச்சை நாடக அங்கதம் என்று குறிப்பர் திறனாய்வாளர். இராமனைக் கண்டபொழுது மகிழ்ச்சியில் திளைக்கும் மக்கள் இராமனை வளர்த்த கைகேயி இப்பொழுது அவன் பட்டம்சூடப் போவதை அறிந்து எவ்வளவு மகிழ்ச்சி அடைவாள் என்று தம்முள் பேசி மகிழ்கின்றனர். அதைக் கவிஞன் மிக அழகாகப் பாடுகிறான்: "தாய்கையில் வளர்ந்திலன்; வளர்த்தது, தவத்தால் கேகயன் மடந்தை; கிளர் ஞாலம் இவன் ஆள, ஈகையில் உவந்த அவ் இயற்கை இது என்றால், தோகை அவள்பேர் உவகை சொல்லல் அரிது? என்பார்." . கம்ப 1591 எந்தக் கைகேயி அன்பின் வடிவானவள் என்றும், இராமன் முடிசூடலைக் கண்டு மகிழ்ச்சி அடைவாள் என்றும் உறுதியாக நம்பி இந்த மக்கள் இவ்வாறு பேசுகிறார்களோ, அதே கைகேயி இவர்கள் பேசுவதற்கு ஒரு நாழிகைப் பொழுதிற்கு முன்னரே இராமன் முடிசூடலை நிறுத்தி அவனைக் காட்டிற்கு அனுப்பவும் ஏற்பாடு செய்து விட்டாள். நடந்தது இன்னதென்று அறியாமல் அவள் அடையப் போகும் மகிழ்ச்சியைக் கற்பனை செய்த கொண்டு பேசும் இம்மக்களின் மகிழ்ச்சிக் குரல்கள் நாடக அங்கதத்திற்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும். நாடக அங்கத முறையில் நடந்ததை அறிந்துகொள்ளாமல் மகிழ்ந்து பேசிய மக்கள் ஒரு புறம். அதே நேரத்தில் மற்றொரு கூட்டத்தார் இனி நடக்கப் போவதைத் தம்மையும் அறியாமலேயே சோதிடம் கூறுவது போலப் பேசி