பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தந்தையும் இராமனும்ே 75 "எய்த அம்பு இடைபழுது எய்திடாமல், என் செய் தவம் யாவையும் சிதைக்கவே! என, கை அவண் நெகிழ்தலும், கணையும் சென்று, அவன் மை அறு தவம் எலாம் வாரி, மீண்டதே. - கம்ப. 1301 என்ற இந்தப் பாடல் உயிர்தப்ப விரும்பிய பரசுராமன் தன்ன் செய்த தவம் அனைத்தையும் அம்புக்கு இலக்காக அளிக்கிறான். ஆம்! இராமன் விரும்பியதும் அதுதானே! பரசுராமன் என்ற மனிதனைக் கொல்வதில் இராமனுக்கு விருப்பமில்லை. அவன். ஆணவத்திற்கு ஆணிவேர் ஆகிய தவபலத்தைத் அழிக்க விரும்பினான். அதையும் தானாகச் செய்தது போலில்லாமல், பரசுராமன் வாய்மொழி மூலமாகவே அதைப் பெற்றுவிட்டான். தவ வலிமை, வர வலிமை யாவும் கொண்ட அரக்கர்களை அழிக்க வந்த இராமனுக்கு மிகப் பலரது தவ வலிமையும் தேவைப்படுகிறது. இவ்வகையில் இருபத்தொரு தலைமுறை அரசகுலத்தை அழித்துத் தவ வலிமையல் ஓங்கிநிற்கும் பரசுராமனின் தவப்பலனும் கிட்டுகிறது என்பதும் குறிக்கத்தக்கது. பரசுராமன் சென்றுவிட்ட பின்னர் நடந்தது எதையும் காணமுடியாமல் மயங்கிக் கிடந்த தசரதன் மைந்தனாகிய இராகவன் தொழுது வணங்கி, அவனை அவலக் கடலில் இருந்து கரை ஏற்றினான் (1803). தசரதனுக்குக் கிட்டாத பேறு பாவம், பரம்பொருளையே பிள்ளையாகப் பெற்றும் மானிட வடிவில் நின்று அவன் இயற்றிய மாபெரும் செயல்களைப் பக்கத்தில் இருந்துங்கூடப் பார்த்துப் பூரிக்கக் கொடுத்து வைக்காதனாக மயங்கி விழுந்து விட்டான் தசரதன். இதன் காரணம் யாது? இராமன் பிறந்த பிறகு சுற்றத்தார் அனைவரிடமும், பிள்ளைகளிடமும் பகிர்ந்து அளிக்கப்பட