பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 38 இராமன் - பன்முக நோக்கில் வேண்டிய அன்பைக் கண் மூடித்தனமாக இராமன்மேலேயே செலுத்தி விட்டான் தசரதன். புத்திரவாத்ச்ல்யம் என்று சொல்லப்படும் தந்தைப் பாசம் போற்றத்தக்கது என்றாலும், இப்படிக் கண்மூடித் தனமாக நால்வரில் மூவரை மறந்து ஒருவன்மேல் அதனை முழுவதுமாகச் செலுத்துவது பெருங்குற்றமாகும். விசுவாமித்திரன் மூலமாக மகன் செய்த தாடகை வதத்தை நிச்சசயமாக அறிந்திருப்பான் தசரதன். அப்படி இருந்தும் தன் நிலையிலிருந்து பெரிதும் கீழிறங்கிப் பரசுராமனிடம் மன்றாடுவது அவன் தகுதிக்கு ஏற்றதன்று என்பது ஒருபுறம் இருக்க, அவனை அஞ்சி நடுங்கவைத்த பரசுராமனை ஒரு கணத்தில் ஒடச்செய்த இராமனின் வீரச்செயலைக் காணக் கூடக் கொடுத்துவைக்காதவன் ஆகிவிட்டான். "ஆசை அறுமின்கள், ஆசை ஆறுமின்கள் . ஆசைபடப்பட ஆய்வரும் துன்பங்கள்” (திருமந். 2615 என்ற திருமூலரின் வாக்கிற்கு விளக்கம் தருவோனாகிவிட்டான் தசரதன். தந்தையின் ஆசை - அரசன் கட்டளை - கன்யா சுல்கச் சிக்கல் அடுத்தபடியாக, தந்தையும் மகனும் சந்திக்கும் இடம் தசரதன் மந்திராலோசனை சபையில் ஆகும். மிக நீண்ட யோசனைக்குப் பிறகு அமைச்சர்களையும், வசிட்டரையும் வரவழைத்து, இராமனுக்குப் பட்டத்தைக் கொடுத்துவிட்டுத் தான் காடு செல்ல விரும்புவதாகக் கூறினான். அனைவரும் அதை ஏற்றுக் கொண்டவுடன் சுமந்திரனை அழைத்து இராமனை வரவழைத்தான். தந்தை அழைக்கிறார் என்றவுடன் மிக்க மரியாதையுடனும் அன்புடனும் வந்த இராகவன், தந்தையின் திருவடிகளை வணங்கினான். அவனை மார்புறத் தழுவிப் பக்கத்தில் இருத்திக் கொண்டு, தசரதன் பேசத் தொடங்குகிறான். "மழுவுடைய பரசுராமனை வென்ற பெருவீரனே! உன்னைப் பெற்றவனாகிய நான் உன்னிடம் இப்பொழுது ஒன்றை வேண்டிநிற்கின்றேன்” (1378). "ஐயனே, நீண்டகாலம்