பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தந்தையும் இராமனும்ேே 77 வாழ்ந்து ஆட்சி செய்த காரணத்தால் என்னுடைய வன்மை குறைந்து மூப்பு வந்து எய்திவிட்டது. இவ்வரசபாரத்தைத் துறந்து விடுதலைபெற்று நான் உய்வதற்குரிய வழிவகைகளைத் தேட விரும்புகின்றேன்" (1374, “பிள்ளைகளைப் பெறுவதன் நோக்கம் தளர்வுற்ற காலத்தில் அவர்கள் தங்களைத் தாங்குவார்கள் என்பதேயாம். ஈடு இணையற்ற உன்னைப் பெற்ற யான், இப்பொழுது தளர்ச்சி அடைவது முறையா'(1375), "மகனே! நம்குலத்து உதித்த மன்னர்கள் பெற்ற பிள்ளைகள் உரியகாலத்தில் தந்தைமார்களின் பாரத்தைத் தாங்க, அம்மன்னர்கள் நாடு நீங்கிக் காடு சென்று ஐம்புலன்களையும் அடக்கி, காமம், வெகுளி, மயக்கம் என்ற முப்பகையையும் வென்றனர்" (1376, "மாபெரும் வேள்வி செய்து நின்னைப் புதல்வனாகப் பெற்ற யான் இன்னும் இந்த அரசபாரத்தைச் சுமக்க வேண்டும் என்றால், உன்னைப் பெற்றதால் பெறும் ப்யன் யாது?" (1377) "நம்குல முன்னோர்களில் ஒருவனாகிய பகீரதன், கங்கையை உலகத்திற்குக் கொண்டுவந்து நம் முன்னோரைக் கரையேற்றினான்" (1378). "தந்தை சொல்லை மீறாத பிள்ளைகளைப் பெற்றவர் எல்லாத் துயரங்களினின்றும் விடுபட்டவர் ஆவர்" (1380). 'எனவே, ஏதோ இந்தப் பாரத்தை உன்மேல் சுமத்துகிறேன் என்று கருதிவிட வேண்டா. நீ இந்த நாட்டின் முடியைச் சூடி அரசை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுவே, நான் உன்னிடம் வேண்டுகின்ற ஒன்றாகும்" (138). தசரதனின் இந்த நீண்ட முன்னுரையைக் கேட்ட இராகவன், அரசன் ஏவலின்படி நடப்பதே தனக்கு நீதி என்ற முடிவுக்கு வந்தான். அக்கருத்தைக் கூறும் பின்வரும் பாடலும், அதனை அடுத்து வரும் பாடலும் பெருங்குழப்பத்தை விளைப்பனவாக உள்ளன.