பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 38 இராமன் - பன்முக நோக்கில் "தாதை, அப்பரிசு உரைசெய, தாமரைக்கண்ணன் காதல் உற்றிலன்; இகழ்ந்திலன்; "கடன்இது என்று உணர்ந்தும், 'யாது கொற்றவன் ஏவியது அது செயல் அன்றோ நீதி எற்கு? எனநினைந்தும், அப்பணி தலை நின்றான்". - கம்ப 1382 "குருசில் சிந்தையை மனக்கொண்ட கொற்ற வெண்குடையான் 'தருதி இவ்வரம்' எனச்சொலி, உயிர் உறத்தழுவி சுருதி அன்னதன் மந்திரச் சுற்றமும் சுற்ற, பொருஇல் மேருவும் பொரு அருங்கோயில் போய்ப்புக்கான்". - கம்ப 1383 இப்பாடல்களின் பொருள் வருமாறு: "தந்தையாகிய தசரதன் மேலே சொன்னவாறு மகனை வேண்ட தாமரைக் கண்ணன் அவ்வரசைப் பெற விரும்பவும் இல்லை; அது துச்சம் என இகழவுமில்லை. முதல் மகனாகிய தான் இப்பொறுப்பை ஏற்பது தன் கடமை என்றும், அரசர் என்ன ஆணையிட்டாரோ அதன்படி செய்தலே நீதி வழுவாத செயலாகும் என்றும் நினைந்து அப்பொறுப்பை ஏற்கச் சித்தமாக இருந்தான்". (1382) “உயர்ந்தவனான இராமனுடைய ஆழ்மனத்தில் (சிந்தை) ஒடுகின்ற எண்ணங்களைத் தன் மனக் கண்ணால் அறிந்து கொண்டவனாகிய தசரதன், இராமனை மார்போடு சேர்த்துத் தழு விக்கொண்டு அமைச்சர் முதலானோருடன் அரண்மனைக்குள் புகுந்தான்". (1883) இந்த நிகழ்ச்சியை, தொடக்கத்தில் இருந்து பாடல்களை வரிசைப்படுத்திக் கோயில் புகுந்தான் வரை உள்ள பகுதியை அமைதியாகப் படித்துப் பார்த்தால் மனத்தில் பல ஐயங்கள் தோன்றாமல் இரா. உலகம் தோன்றிய நாளிலிருந்து ரகுவம்சம்