பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தந்தையும் இராமனும்ேே 81 சிரமேற்கொண்டு நடத்தலே எனக்கு நீதியாகும்” என்று இராமன் மனத்திற்குள் நினைந்தான் என்று கம்பன் பாடுகிறான். இராமனுடைய மனத்தில் ஒரு போராட்டம் நிகழ்கின்றது என்பதை அறிவில் சிறந்த தசரதன் உடனே புரிந்து கொண்டான். தன் மனத்தில் நிகழ்ந்த போராட்டத்திற்குப் பிறகு அரசன் ஆணையை நிறைவேற்றுவதே நீதி என்ற முடிவிற்கு வந்தாலும், இராகவன் வாய் திறந்து அதனைச் சொல்லவில்லை. அவனுடைய மன ஓட்டங்களை நன்கு புரிந்துகொண்ட தசரதன் அதிர்ந்துபோனான். 'குருசில் சிந்தையை மனக்கொண்ட கொற்ற வெண்குடையான்' என்ற அடிக்கு எவ்வாறு பொருள் கொள்வது? குருசில் சிந்தையை என்றதால் இராமனுடைய ஆழ்மனத்தில் நிகழ்ந்த போராட்டம் இது என்பதை அறிந்து கொண்ட தசரதன், ஒருவேளை மகன் வேறு முடிவுக்கு வந்தாலும் வரக்கூடும் என்று அஞ்சிவிட்டான். இராகவன் அப்படி ஒரு முடிவுக்கு வந்து மந்திராலோசனை சபையில் பலர் அறிய அதைச் சொல்லிவிட்டால் தன் திட்டங்கள் அனைத்தும் பொடியாகி விடும் என்று நினைத்த தசரதன் இராமனைப் பேசவிடாமல், தகுதி இவ்வரம்' என்று சொல்லி அவனை மார்போடு அனைத்துக் கூட்டிச் சென்றுவிட்டான் என்று பாடுகிறான் கவிஞன். ஒன்று வேண்டுவது என்று ஆரம்பித்து, இறுதியாக "இவ்வரத்தைத் தருவாயாக’ என்று ஒரு தந்தை மகனிடம் பேசினால், அதில் ஏதோ உட்பொருள் உள்ளது என்பதை அறியலாம். - கம்பன் வெளிப்படையாகக் கூறாவிட்டாலும், வான்மீகி யின் மூலநூலில் அயோத்தியா காண்டம் 18ஆம் சருக்கம் 3ஆவது பாடலில் சொல்லப்பட்ட இராஜசுல்கம் கற்பவர் மனத்தில் வந்தே தீரும். இந்த மந்திராலோசனை சபையில் இராஜசுல்கம் பற்றிய தகவலை அறிந்தவர் மூவரே ஆவர். ஒருவன் தசரதன், இரண்டாமவன் வசிட்டன், மூன்றாமவன் இராமன். இந்நிலையில் வசிட்டனை எதிரே ol-Բ